இடுகைகள்

கியர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தானியங்கி கியர் போடும் கார்களின் மீதான மோகம்!

படம்
giphy மிஸ்டர் ரோனி அமெரிக்கர்கள் தானியங்கி கியர் போடும் முறையுள்ள கார்களை அதிகம் வாங்குகின்றனர். என்ன காரணம்? அமெரிக்காவில் உள்ள சாலைகள் பெரும்பாலும் வளைந்து நெளிந்து செல்பவையல்ல. அங்கு மக்கள் தொகையும் குறைவுதான். எனவே அவர்களுக்கு, தானியங்கி கார்கள் உதவும். இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த கார்களை எளிதாக பயன்படுத்த முடியாது. குண்டும் குழியுமாக சாலைகள், அதிக திருப்பங்கள் என நீங்கள் கியர்களை அடிக்கடி மாற்றி மாற்றி சோர்வீர்கள். அங்கு தானியங்கி கியர் போடும் முறை பயன்படாது. ஆனால் அமெரிக்காவில் நேராக செல்பவையாக உள்ளன. வளைவு என்பது ஒப்பீட்டளவில் குறைவு. எனவே தானியங்கி கியர் போடும் முறை அங்கு விரும்பப் படுகிறது. முழுவதுமாக கார்கள் கணினியில் இயக்கப்பட்டாலும் அதையும் அமெரிக்கர்கள் வரவேற்பார்கள். அந்த நேரத்தில் ஏதாவது வேலையைப் பார்க்கலாம் பாருங்கள். நன்றி - பிபிசி