இடுகைகள்

செவ்வாய்க்கிழமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜோபைடன் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என்ன?

படம்
              அமெரிக்க தேர்தலை முழு உலகமே உன்னிப்பாக கவனித்து வந்தது. காரணம், வல்லரசு நாடு என்பதும் ராணுவ பலம் பொருந்தியதும் என்பதுதான். அதையும் தாண்டி இனவெறியை அதிகரித்து அதிபர் டிரம்ப் செய்த செயல்களை அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்நாட்டை எதிர்க்கும் நாடுகள் கூட ரசிக்கவில்லை. டிரம்ப் தனது ஆட்சிகாலத்தில் செய்த உபகாரம், பெரு நிறுவனங்களுக்கான வரிச்சலுகைதான். பொருளாதாரம் பெரியளவு சிக்கலை சந்திக்கவில்லை. ஆனால் மற்ற அனைத்து விஷயங்களிலும் அமெரிக்கா தனது இடத்தை இழந்தது. குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பிய விவகாரம், பிற நாடுகளுடனான உறவு, பாரிஸ் சூழல் ஒப்பந்தத்திலிருந்து விலகியது, பொருளாதார போர் ஏற்படும்படியான பல்வேறு தடைகளை பிற நாடுகளுக்கு விதித்தது. மேலும் இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட பிற நாட்டினரால் பெற்ற பயன்களை மறந்து அவர்களுக்கு விசா கெடுபிடிகளை இறுக்கியது என ஏகத்துக்கும் அமெரிக்கா கண்டனங்களை சந்தித்து வந்தது. மேலும் இனவெறியாக நடந்துகொண்டதால் உள்நாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் போராட்டங்களையும் காவல்துறை சந்திக்கவேண்டியிருந்தது. இப்போது டிரம்ப் தான் செய்த அனைத்து விஷயங்களுக்கு