இடுகைகள்

ஃபேஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருமணம் நிச்சயிக்கப்பட்ட எட்டு மாதத்திற்குள் பேஷன் டிசைனராகி தன்னை நிரூபிக்கும் பெண்! மெரிசே மெரிசே - இயக்கம் பவன் குமார்

படம்
  மெரிசே மெரிசே தெலுங்கு தமிழ் டப்  படத்தில் உள்ள ஆந்திரதேச ஊர்களை பொள்ளாச்சி, சென்னை என மொழிபெயர்த்தவர்கள் படத்தின் டைட்டிலை அப்படியே விட்டு விட்டார்கள்.   படத்தில் வேறு விஷயங்கள் ஏதுமில்லை. பெண் தனக்கான அடையாளத்தை உருவாக்க எந்தளவு கஷ்டப்படுகிறாள். அதற்காக அவள் படும் பாடுகளே கதை. இதில் பெரிதாக நாயகனுக்கு வேலை கிடையாது. நாயகனின் பெயர் சித்து, நாயகி பெயர் வெண்ணிலா. படத்தின் முதல் காட்சியிலேயே பெண்ணுக்கு கல்யாண நிச்சயம் ஆகிவிடுகிறது. அப்போது பெண் பிகாம் படித்துக்கொண்டிருக்கிறாள். அம்மா இல்லாத பெண். அப்பா மட்டும்தான். எனவே, அவர் நிறைய வரதட்சிணை கொடுத்துத்தான் பெண்ணை மணமுடிக்க நினைத்திருக்கிறார். அப்போது எட்டுமாதம் கழித்து   தான் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக மாப்பிள்ளை சொல்லுகிறார். அப்போதே பெண்ணின் தந்தை எட்டு மாதமா என திடுக்கிடுகிறார். ஆனால் மாப்பிள்ளை அவரை சமாதானப்படுத்துகிறார். அப்போதே கதை ஏறத்தாழ புரிந்துவிடுகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அந்தப் பெண் கிடைக்கமாட்டாள் என்பது. இந்த இடைவெளியில் பிகாம் படிப்பை பாதியில் நிறுத்திய பெண், தனது உறவினர் வீட்டுக்கென சென்னைக்கு செல்கிறாள்.

பெண்களை தொழில்முனைவோராக்கும் அங்கிதி போஸ்!

படம்
  அங்கிதி போஸ் அங்கிதி போஸ் தொழில்முனைவோர், ஸில்லிங்கோ 2015ஆம் ஆண்டு. அங்கிதிக்கு வயது 23. அப்போதுதான் தனது வேலையை விட்டு விலகி தனக்கென தனி வணிக நிறுவனத்தைத் தொடங்கினார்.ஸில்லிங்கோ என்பதுதான் அதன் பெயர்.  வணிக நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனம் இது.  சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் வணிக ரீதியான பிரச்னை ஏற்பட்டு வந்த சமயம். பாங்காக் சென்றிருந்தார் அங்கிதி. அங்கு சிறு, குறு வணிகர்கள் தங்களுக்கென இணையநிறுவனங்களே இல்லாமல் வேலை செய்து வந்தனர். அவர்களின் பொருட்களை இணையத்தில் வாங்க முடிந்தால் இன்னும் எளிதாக வருமானத்தை அவர்கள் பெறலாம் என அங்கிதி நினைத்தார்.  இதற்காக துருவ் கபூருடன் சேர்ந்து ஸில்லிங்கோ நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க வணிகர்கள் சீனாவிலிருந்து பொருட்களை வாங்குவதை கைவிட்டு வேறு நிறுவனங்களை தேடி வந்தனர். இந்த நேரத்தில் தெற்காசியாவில் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வந்தன. ஆன்லைனில் இந்த  நிறுவனங்கள் இருந்தால் எளிதாக வணிக வாய்ப்பை பெற்றிருக்க முடியும். இதற்கான பல்வேறு கட்டமைப்புகளை, வசதிகளை அங்கிதி, வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க தொடங்கினார்.  இந்தோனேஷி

பெண்கள் தங்கள் கனவை எப்போதும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது! ஃபர்கா சையத், ஃபேஷன் டிசைனர்

படம்
  ஃபர்கா சையத் ஃபேஷன் டிசைனர் சிறுவயதிலிருந்து பொம்மைகளுக்கு துணிகளை பொருத்திப் பார்த்து தைத்துக் கொண்டிருந்தவர், இன்று ஃபேஷன் டிசைனராக மாறியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லைதான். சிறிய நிறுவனமான தனது தொழிலைத் தொடங்கியவர் இன்று எஃப் எஸ் குளோசட் என்ற நிறுவனமாக வளர்ந்திருக்கிறார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தனது ஃபேஷன் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் ஃபர்கா.  தனது திறமையால் இன்று இந்தி திரைப்பட உலகிலும் நுழையவிருக்கிறார். அவரிடம் பேசினோம்.  ஃபேஷன் டிசைனிங் துறைக்குள் வர உங்களைத் தூண்டியது எது? எனக்கு சிறுவயதில் இருந்தே இத்துறையில் ஆர்வம் இருந்தது. எனது டிசைன் சார்ந்த வணிகத்தை 2018இல் தொடங்கினேன். எனக்குப் பிடித்ததை சரியாக செய்யவேண்டும் என்பதுதான் லட்சியம். எனது பிராண்டை பிரபலப்படுத்த நான் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இன்று என்னுடைய பிராண்ட் பலருக்கும் தெரியும் விதமாக மாறியிருக்கிறது.  இத்துறையில் உங்களுக்கு ஊக்கம் கொடுத்தது யார்? சிக்கலான சவால்களை சமாளித்து தங்களை காத்துக்கொள்ள முன்னிலைப்படுத்திக்கொள்ள போராடும் அனைத்து பெண்களுமே எனக்கு ஊக்கம் கொடுத்தவர்கள் தான். அவர்கள் த

மனிதர்களின் கதையைத்தான் புகைப்படங்கள் மூலம் சொல்ல நினைக்கிறேன்! - டேனியல் பிரைஸ்

படம்
  ஜொனாதன் டேனியல் பிரைஸ் ஃபேஷன் போட்டோகிராபர் புகைப்படக்காரராக மாற எந்த அம்சங்கள் உங்களைத் தூண்டின? சிறுவயதில் புகைப்படம் பற்றிய நிறைய நினைவுகள் இருந்தன. 1970களில் லண்டனில் எனது அம்மா பாடகராக வேலைசெய்துகொண்டிருந்தார். அவரது புகைப்படம்தான் இக்கலை மீதான என் முதல் ஈர்ப்பு. புகைப்படங்களை வைத்து பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்து வந்தேன். ஆனால் 17 வயது வரையிலும் அதுபற்றிய தீவிரம் வரவில்லை. பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம்களை பயன்படுத்தித்தான் நான் புகைப்படக்கலையைக் கற்றுக்கொண்டேன்.  உங்கள் வேலையை எப்படி வரையறுக்க விரும்புகிறீர்கள்? நான் பழைய நினைவுகளில் காதலன். எனது வேலையைப் பார்த்தால் அதனை நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ளுவீர்கள். ஆண்களை புகைப்படங்களாக எடுக்கும்போது மென்மையான டோன் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். புகைப்படத்தின் வழியாக ஒரு கதையை சொல்ல முயல்கிறேன்.  உங்களது லென்ஸ் வழியாக நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? மனிதர்கள்தான் என்னுடைய ஆர்வமான பொருள். மனிதர்களை புகைப்படம் எடுப்பதன் வழியாகத்தான் அவர்களின் வாழ்கையை நான் அறிய முடியும். இந்த வகையில் தான் மக்களின் மனிதநேயத்தை ந

டிரெண்ட் செட்டர்கள் 2019 - டிஜிட்டல் தொழிலதிபர்கள்

படம்
டிரெண்ட் செட்டர்கள் புவன் பாம் யூடியூப் - பிபி கி வைன்ஸ் 15.4 மில்லியன் பார்வையாளர்கள் 2015 ஆம் ஆண்டு தொடங்கிய யூடியூப் சேனல் பல்வேறு காமெடி வீடியோக்களால் நிரம்பி வழிகிறது. ஜம்மு காஷ்மீரில் வெள்ளப்பாதிப்பு நிகழ, அதனை டிவி நிருபர் காட்சிபடுத்துகிறார். மகனை இழந்த தாயிடம், உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அதனைப் பார்த்த புவன், அதனை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை தயார் செய்து பதிவிட்டார். அப்போது அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். பின்னர் 2015ஆம்ஆண்டு யூடியூப் சேனலைத் தொடங்கி, டீனேஜ் பிரச்னைகள் முதற்கொண்டு ஆன்டி பிரச்னை வரை அனைத்தையும் பகடியாக பதிவுசெய்யத் தொடங்கினார் புவன். டிட்டு மாமா, ஜான்கி ஜி என்ற இவரின் பல்வேறு வேடங்கள் இணையத்தில் செம ஹிட் அடித்தன. “நான் நல்ல கருத்தை வீடியோக்கள் வழியே சொல்ல நினைக்கிறேன். அதில்  சிலசமயங்களில் கடும் சவாலை சந்திக்கிறேன்.’ என்கிறார். ஜோனிதா காந்தி பாடகி ஜோனிதா மியூசிக் - யூடியூப் சேனல் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஜோனிதா கனடாவில் படித்து வளர்ந்தவர். இன்று இந்திய மொழிகளில் பத்துக்கும் மேற

ஃபேஷன் உலகில் சாதித்த திறமைசாலி - மிஸ் ஜே

படம்
மாற்றுப்பாலினச் சாதனையாளர்கள் ஜே.அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் ஜென்கின்ஸ், ஃபேஷன் உலகில் வெகு பிரபலமான ஆள். மிஸ் ஜே என்று அழைக்கப்படுவர், 1958 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்காவின் டிவி உலகில் பல்வேறு மாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் ஆலோசகராகவும் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவில் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸில் பிறந்தவருக்கு, ஃபேஷன் வழிகாட்டுதலை வழங்கியது யாரோ அல்ல; அவரது அம்மாதான். பின்னர் எலைட் மேனேஜ்மெண்ட நிறுவனத்தைச் சேர்ந்த மோனிக் பில்லார்டு ஜேவைப் பார்த்தார். அவரின் தோற்றத்தைப் பார்த்ததும் மாடலுக்கு சரியான ஆள் என முடிவு செய்தார். உடனே அக்ரிமெண்டை ரெடி செய்து கையில் கொடுத்துவிட்டார். அதன்பின் படிப்பை தூக்கிப்போட்டு மாடலிங்கில் குதித்தார் ஜே. வெற்றியும் பெற்றார். பின்னர்தான் டைரா பேங்க்ஸ் என்ற நடிகையின் நிகழ்ச்சியில் ஆலோசகரானார். அவருக்கு நிகழ்ச்சி பற்றிய பல்வேறு ஆலோசனைகளை கட்டண சேவையில் வழங்கினார். மேலும் டைரா ஷோ என்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். வெறும் ஆலோசனைகள் மட்டுமன்றி அமெரிக்கா நெக்ஸ்ட் மாடல் எனும் நிகழ்ச்சிக்காக பல்வேறு ஆடைகளையும்  உருவாக்கினார். இவர் இ

பெண்கள் உடையில் பாக்கெட் !

படம்
கையில் பாக்கெட்\க்யூரியாசிட்டி ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி பெண்கள் உடையில் பாக்கெட் இல்லாதது ஏன்? ஜீன்ஸில் வரும் பாக்கெட்டுகளில் சிம்பிளான தங்க கிளி கடலை மிட்டாய் கூட வைக்க முடியாது. அப்புறம் ஆண் என்ன? பெண் என்ன? ஜீன்ஸில் வரும் பாக்கெட் என்ன? இருந்தாலும் பெண்களுக்கு ஏன் பாக்கெட் வைக்க மாட்டேன்கிறார்கள். அவர்களுக்கு லக்கேஜ் சுமக்க  ஆண்கள் இருக்கிறார்களே என கடியெல்லாம் வேண்டாம். உண்மையில்  மத்தியக்காலங்களில் பெண்கள் ஆண்கள் யாவரும் தனி துணியில் தைத்த பையில் பொருட்களை வைத்துக்கொண்டு சுற்றினர். பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் டெய்லர் ஒருவர் உடையிலேயே பாக்கெட்டை அட்டாச் செஞ்சிடலாமே என யோசித்து செய்ய இன்று நம் சட்டையிலும் பாக்கெட் இருக்கிறது. பெண்களுக்கும் இணைத்தார்கள். ஆனால் மாறிவரும் ஃபேஷன் வேகத்தில் பாக்கெட்டுகள் துருத்திக்கொண்டு எறிய, மெல்ல அதனை தூக்கி விட்டார்கள். பெண்கள் வைத்திருக்கும் பொருட்களுக்கு பாக்கெட்டுகள் எப்படி பிடிக்கும் என லாஜிக்கும் இதற்கு உண்டு. விக்டோரியா கால பெண்கள்    chatelaines  எனும் ஒருவகை ஆபரணத்தை அணிந்தார்கள். பார்க்க கிணற்று வாளிபோ