பெண்களை தொழில்முனைவோராக்கும் அங்கிதி போஸ்!
அங்கிதி போஸ் |
அங்கிதி போஸ்
தொழில்முனைவோர், ஸில்லிங்கோ
2015ஆம் ஆண்டு. அங்கிதிக்கு வயது 23. அப்போதுதான் தனது வேலையை விட்டு விலகி தனக்கென தனி வணிக நிறுவனத்தைத் தொடங்கினார்.ஸில்லிங்கோ என்பதுதான் அதன் பெயர். வணிக நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனம் இது.
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் வணிக ரீதியான பிரச்னை ஏற்பட்டு வந்த சமயம். பாங்காக் சென்றிருந்தார் அங்கிதி. அங்கு சிறு, குறு வணிகர்கள் தங்களுக்கென இணையநிறுவனங்களே இல்லாமல் வேலை செய்து வந்தனர். அவர்களின் பொருட்களை இணையத்தில் வாங்க முடிந்தால் இன்னும் எளிதாக வருமானத்தை அவர்கள் பெறலாம் என அங்கிதி நினைத்தார்.
இதற்காக துருவ் கபூருடன் சேர்ந்து ஸில்லிங்கோ நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க வணிகர்கள் சீனாவிலிருந்து பொருட்களை வாங்குவதை கைவிட்டு வேறு நிறுவனங்களை தேடி வந்தனர். இந்த நேரத்தில் தெற்காசியாவில் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வந்தன. ஆன்லைனில் இந்த நிறுவனங்கள் இருந்தால் எளிதாக வணிக வாய்ப்பை பெற்றிருக்க முடியும். இதற்கான பல்வேறு கட்டமைப்புகளை, வசதிகளை அங்கிதி, வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க தொடங்கினார்.
இந்தோனேஷியாவில் 40 சதவீத பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலையை விட்டு விலகுவது பற்றி அறிந்தார். ஸில்லிங்கோ ஃபேஷன் சார்ந்த துறையில் அதிக சேவைகளை வழங்குகிறது. எனவே, உள்ளூர் பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி அவர்களை தொழில்முனைவோராக்கும் செயல்களை அங்கிதி செய்து வருகிறார். பெண்களுக்கான தொழில், விவாதங்களை ஸில்லிங்கோ ஒருங்கிணைத்து நடத்தி உதவுகிறது.
ஃபெமினா
கருத்துகள்
கருத்துரையிடுக