மொழியைப் பேச தெரியாமல் இன்னொரு மொழி படத்தில் நடிக்க முடியாது! - அர்ஜூன் ராம்பால், இந்தி நடிகர்
அர்ஜூன் ராம்பால், இந்தி நடிகர் |
அர்ஜூன் ராம்பால்
இந்தி நடிகர்
லண்டன் டயரிஸ் படத்தில் உங்களுடைய பாத்திரம் தனிப்பட்ட ரீதியில் தாக்கம் ஏற்படுத்தும்படி இருந்ததா?
தனியாக யாரும் இல்லாமல் ரகசியங்களை தேடித்திரியும் துப்பறிவாளன் ஒருவரின் கதை. பொதுவாக நாம் அனைவரும் பெருந்தொற்று காலத்தில் தனியாக இருந்திருப்போம். அப்போது கூட நமக்கென குடும்பம், மனிதர்கள் என ஒரு வட்டாரம் இருந்திருக்கும். ஆனால் இப்படி ஏதுமின்றி ஒரு மனிதன் இருந்தால் எப்படியிருக்கும்? நான் ஏற்று நடித்த பாத்திரம் அப்படித்தான் எனக்குள் சுவாரசியமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஓடிடி உங்களுக்கு சவாலான பாத்திரங்களை வழங்கியதா?
அப்படி சொல்ல முடியாது. கடந்த சில ஆண்டுகளாக நான் நடித்த பல படங்கள் தவறான தேர்வுகளைக் கொண்டவை. அபர்ணா சென்னின் தி ரேப்பிஸ்ட், தாக்கத் ஆகிய படங்களை நான் தேர்ந்தெடுத்தேன். இவை உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டவை.
நீங்கள் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்ததே?
நடிக்க கேட்டார்கள். எனக்கு தெலுங்கு மொழி தெரியாது. இந்த நிலையில் அங்கு போய் எப்படி நடிப்பது என நான் என்னால் முடியாது என மறுத்துவிட்டேன்.
இதற்கு இயக்குநர் அபர்ணா சென் தான் காரணம். அவர்தான் இந்த பாத்திரங்களை உரு
வாக்கினார். இதற்கு முன்னர் நான் கொங்கனா சென்னுடன் வேலை செய்ததில்லை. படத்திற்கான பயிற்சிகளில் இருவரும் ஒருவரைப்பற்றி மற்றவர் அறிந்துகொள்ள முடிந்தது.
சுகானி சிங்
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக