குடும்ப வாழ்க்கையைக் காப்பாற்ற கணவன் செய்யும் திடுக் கொலைகள்! - டீப் வாட்டர்

 





டீப் வாட்டர் 2022






டீப் வாட்டர்
பென் அஃப்ளிக், அனா டி அர்மாஸ் 









மனைவியின் செக்ஸ் விருப்பங்களை கணவன் பொதுவெளியில் அங்கீகரிப்பது போல நடித்து, அந்தரங்கத்தில் பொறாமை கொண்டால் என்னாகும் என்பதுதான் கதை. 

நவீன கால குடும்பத்தைக் காக்கும் கதை போல தோன்றலாம். திருமணமான பல்வேறு தம்பதிகள் சந்திக்கும் பிரச்னை இது. காதல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் புறக்கணித்துவிட்டு பிற விஷயங்களை அடையாளம் கண்டு செய்யப்படுவதுதான் திருமணம் என எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியுள்ளார். 

திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி என இருவருக்குமான காதல் குறைந்துபோகிறது. இதை சரிசெய்யாமல், மனைவியை குடும்ப வாழ்க்கையில் தக்க வைத்துக்கொள்ள கணவன் செய்யும் முயற்சி நினைத்துப் பார்க்க முடியாத பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இறுதிக்காட்சியில் இதை உணரும் மனைவி, அந்த திருமண வாழ்க்கையை அப்படியே தொடருவதுதான் கதை. 

gone girl 2014  படத்தில் நடித்த பென் அஃபிக்தான் நாயகன். விக் ஆலன் என்ற பாத்திரத்தில் தனது உணர்வுகளை உள்ளடக்கி நடித்திருக்கிறார்.  திருமண வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார். மனைவி மெலிண்டா, திருமண வாழ்வில் கிடைக்காத மகிழ்ச்சியை பிற ஆண் தோழர்களிடம் தேடிப்பெற முயல்கிறார். கணவனின் பொறாமையால் நிறைய சவால்களை சந்திக்கிறார். 

படத்தில் விக் ஆலன்(பென்) பேசும் வசனங்கள் அனைத்துமே மிக கச்சிதமாக எழுதப்பட்டுள்ளன. காட்சிகளும் படத்தொகுப்பும் அப்படித்தான். படம் தொடங்கும்போது வரும் அக்கவுஸ்டிக் இயல்பிலான பாடல், படம் நெடுக நம்மைத் தொடருகிறது. நாம் செய்த செயல்கள் நம் நினைவில் வரிசையாக நின்று தொடர்வது போல...

அனா, திருமண வாழ்க்கையில் நினைத்த காதல் கிடைக்காமல் அதை பல்வேறு ஆண்களிடம் தேடிப் போகிறார். டோனி, ஜோயல் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஒருகட்டத்தில் தான் பிடித்த அமெரிக்கர் ஒருவரிடம் உறவு கொண்டேன் என்று கூட கணவரிடம் சமையல் அறையில் கூறுவது விரக்தியின் உச்சம். படத்தில் தொடக்க காட்சியும் இறுதிக்காட்சியும் ஒன்றுபோலவே உருவாகி நிறைவடைகிறது. அனைத்தும் சுமூகமாக செல்வது போலான தன்மையைக் காட்டுகிறது,. ஆனால் உள்ளுக்குள் தம்பதியர் இருவருக்கும் பெரும்போராட்டமே நடந்துகொண்டிருக்கிறது. ஒருவகையில் இது நிழல் யுத்தம் போலத்தான். 

படம் நெடுக உடலுறவு காட்சிகள், ப்ளோஜாப்  காட்சிகள் நிறைய உண்டு. எனவே, படத்தை குடும்பத்திலுள்ளவர்கள் தனித்தனியே பார்த்து ரசிக்கலாம். பாதகமில்லை. 

நீருக்கடியில் ரகசியம்!

கோமாளிமேடை டீம் 

நன்றி

த.சக்திவேல், பத்திரிகையாளர்





கருத்துகள்