செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிறைய சவால்கள் உண்டு!
மேக்ஸ் டெக்மார்க், அறிவியலாளர் |
மேக்ஸ் டெக்மார்க் -Max Tegmark
விண்வெளி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தவர் நீங்கள். திடீரென எதற்கு செயற்கை நுண்ணறிவு துறையில் ஆய்வு செய்யத் தொடங்கினீர்கள்?
எனக்கு பெரிய கேள்விகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம். கற்பனைக்கு எட்டாத பெரிய கேள்விகள், பெரிய, சரியான கேள்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம். விண்வெளி உருவாகியது, அதூபற்றி தத்துவங்கள், அனைத்து விஷயங்களும் எப்படி தொடங்கியிருக்கும்?, அடுத்து என்ன நடக்கப்போகிறது, இந்த விவகாரங்களுக்கு இடையில் நமது பங்கு என்ன? என்று இப்படி கேள்விகள் சென்றுகொண்டே இருக்கும். நான் வானியலில் நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால் அதில் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது கடினமானதாக இருக்கிறது. மிகவும் அரியதும் கூடத்தான்.
எனவே, நான் விடை காண முடியாத சிக்கல்களைக் கொண்ட துறையை தேடினேன். அப்போதுதான் நரம்பியல்துறை சார்ந்த தகவல்கள், அதில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி தெரிய வந்தது. இன்று நாம் நுண்ணோக்கிகள் வழியாக நம் முன்னோர்கள் பார்க்க முடியாத அறிவியல் விஷயங்களைப் பார்த்து ஆராய்ந்து தெரிந்துகொண்டிருக்கிறோம்.
தற்போதைய தங்களது ஆராய்ச்சி பற்றி கூறுங்கள்.
எந்திரக்கற்றல் முறையைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்றைச் செய்து வருகிறேன். இதனை பலரும் சிறந்தது என்று கூறுகிறார்கள். நான் அப்படி கூறுவதன் அடிப்படையை ஆய்வு செய்து வருகிறேன்.
இதைப்பற்றி சற்று விளக்கமாக சொல்லுங்களேன்.
செயற்கை அறிவைப் பயன்படுத்தி நாம் விரிவான தளத்தில் அறிவுசார்ந்த போட்டியை சந்திப்பதுதான். இதில் முக்கியமான சவால் இதுதான். தற்போது இந்த தொழில்நுட்ப வளர்ச்சி நமது அறிவு வளரும் வேகத்தில் வளரவில்லை. கற்காலத்தில் நெருப்பைக் கண்டுபிடிக்க கூட பெரும் போராட்டம் இருந்தது. ஆனால் விரைவில் நாம் தவறுகளிலிருந்து நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம். அதனால்தான் வேகத்தைக் கட்டுப்படுத்த போக்குவரத்து சிக்னல்கள், வேகத்தடைகள் உருவாக்கியுள்ளோம். மேலும், விபத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க சீட்பெல்டுகள், காற்று பைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கூட அந்தவகையில் பல்வேறு விஷயங்களை புரிந்துகொண்டு உருவாகுவது முக்கியம். அதற்காக நாம் அமெரிக்கா, ரஷ்யா இடையே அணு ஆயுதப் போர் மூழவேண்டும் என்று எண்ணவில்லை. அப்படி நடந்தால் மேகத்திற்கு கீழே நிறைய காளான்கள் பூக்கும். அப்போது, சரி நாம் இந்த தவறிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டோம் என்று கூறமுடியாது. என்னுடைய ஆராய்ச்சி செயற்கை நுண்ணறிவு எப்படி இந்த சூழலை சமாளித்து தன்னை மேம்படுத்திக்கொள்கிறது என்பதும், அதன் மேல் நாம் நம்பிக்கை வைக்க முடியும் என்ற நிலைக்கு வருவதும் சாத்தியமா என்பதை அறிவதுதான்.
செயற்கை நுண்ணறிவு அந்தளவு முக்கியமா?
செயற்கை நரம்பியல் இணைப்புகள் வழியாக எந்திரவழி கற்றல் சாத்தியமானது. இதன் மூலம் உலகிலுள்ள யாரையும் செஸ் விளையாட்டில் தோற்கடிக்க முடியும். செயற்கை நுண்ணறிவு எப்படி செயல்படுகிறது என்பதற்கு இது சிறிய சாம்பிள்தான். போயிங் 737 விமானம் எப்படி இயங்குகிறது என்று உங்களுக்கு த் தெரியுமா? நைட் கேப்பிடல் என்ற நிறுவனம் பங்குச்சந்தையில் இழக்கவிருந்த பணத்தை தானியங்கி அமைப்பு தடுத்து காப்பாற்றிய செ்ய்தியை அறிந்துள்ளீரா?
அமெரிக்காவில் உள்ள நீதிமன்றங்களில் குற்றவாளிகளை விசாரிக்க மென்பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இதனை செயல்பாட்டில் இனவெறித்தன்மை உண்டு என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். இப்போது நாங்கள் செய்யும் ஆராய்ச்சி மூலம், செயற்கை நுண்ணறிவை இன்னும் சிறப்பாக செயல்பட வைக்க முடியும். மக்கள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தினாலும் அதனை முழுமையாக தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
new scientist
கருத்துகள்
கருத்துரையிடுக