பெருந்தொற்று காலம் எனக்கு ஆராய்ச்சி செய்ய நேரத்தைக் கொடுத்தது! - அதிதி கார்வாரே, ஸ்வீட் பொட்டிக்

 





அதிதி கார்வாரே, கேக் கலைஞர்










அதிதி கார்வாரே, கேக் தயாரிப்பு கலைஞர்











அதிதி கார்வாரே

பேக்கர், கேக் தயாரிப்பு கலைஞர்

சோசியோ லீகல் சயின்ஸ் படித்தவர். எல்எல்பி டிகிரியும் வைத்துள்ளார். ஆனால் வழக்குரைஞராக மாற வேண்டியவர், அந்த வழியை தேர்ந்தெடுக்கவில்லை.அதிதிக்கு வயது 31 தான் ஆகிறது. உலகளவில் சிறந்த சமையல் கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவத்தில் ஸ்வீட் பொட்டிக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் ஆறு ஆண்டுகளாக பல்வேறு கேக் வகைகளை தயாரித்து அலங்கரித்து தனது கடை வழியாக விற்று வருகிறார். கேக் மாஸ்டர் யுகே 2020 என்ற அமைப்பு மூலம் இந்தியாவின் டாப் 10 கேக் மாஸ்டர் என்ற பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் அதிதி கார்வாரே. 

அல்டிமேக்ஸ் இந்தியா, மேஜிக் கலர்ஸ் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இருக்கிறார் அதிதி கார்வாரே. 

பெருந்தொற்று காலத்தில் நீங்கள் அடையாளம் கண்ட நேர்மறையான விஷயங்களை சொல்லுங்களேன். 

இந்த காலகட்டத்தில் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அப்போது, நான் இனிப்புகளை, கேக்குகளை பற்றி ஆராய்ச்சி செய்தேன். முதலில் பரபரப்பாக வேலை செய்யும்போது ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் கிடைக்கவில்லை. பெருந்தொற்று தொடங்கும்போதுதான் நிறைய ஆர்டர்கள் எனக்கு கிடைக்கத் தொடங்கின. ஆனால் பெருந்தொற்று தொடங்கிய பிறகு சிறிய அளவிலான ஆர்டர்கள்தான் கிடைத்தன. அதனையும் ஏற்று செய்து வந்தேன். பிறகு, வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு நான் ஆன்லைனில் கேக்குகளை எப்படி தயாரிப்பது என வகுப்புகள் எடுத்தேன். இப்படித்தான் நான் நேர்மறையாக எனது சக்தியை செலவழித்தேன். 

உங்களுக்கு ஊக்கம் கொடுப்பவர்கள் யார்?

என்னுடைய அம்மா, சகோதரி இருவருமே என்னை மேலும் சமைப்பதில் புதுமை செய்வதில் தூண்டுகிறார்கள். அம்மா, சகோதரி இருவருமே சிறப்பாக சமையல் செய்வார்கள். சகோதரி, அனைத்திலும் புதுமை தேடுபவர் என்பதால், எனக்கு பெரிய ஊக்கம் அவர்தான். 

உங்கள் லட்சியம் என்ன?

பெண்கள் பேக்கரி தயாரிப்பு மூலம் தங்கள் தற்சார்பாக உருவாக்கிக்கொள்ள முடியும். நான் அப்படித்தான் தற்சார்பாக வாழ்கிறேன். பேக்கரி தொழிலை செய்வதன் மூலம் பெண்கள் உடல் அளவிலும், மனதளவிலும் வலிமை பெற முடியும். அவர்களுக்கு மெல்ல பொருளாதார பலமும் கிடைக்கும். நான் பேக்கரி பொருட்களுக்கான இன்ஸ்டிடியூட் ஒன்றை உருவாக்க நினைக்கிறேன். இதன்மூலம் நிறைய பெண்களுக்கு பயிற்சி கொடுக்க முடியும். இனிப்பு வகைகளுக்கான தனி கடையை தொடங்கும் திட்டமும் உள்ளது. 

பேக்கரி பொருட்களை தயாரிப்பதை எப்படி தொழிலாக தேர்ந்தெடுத்தீர்கள்?

இந்த தொழிலில் நீங்கள் உங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் முதலீடாக போட வேண்டும். நடைமுறை ரீதியாகவும் கடின உழைப்பும் கொண்டு ஒருவர் இயங்குவதற்கு எந்த மாற்றும் கிடையாது.  ஒரு கேக்கை, இனிப்பை தயாரிப்பதற்கு பின்னே கடுமையான உழைப்பு, கிரியேட்டிவிட்டி உள்ளது. இதுதொடர்பாக உள்ள சிறிய அளவிலான பயிற்சி வகுப்புகளைப் படித்தால் உங்களை நீங்களே மெருகேற்றிக்கொள்ளலாம். அதிசயங்கள் திடீரென ஒருநாளில் நடப்பதில்லை. எனவே, நீங்கள் கலையைக் கற்க உங்களுடைய நேரத்தை செலவிட்டே ஆகவேண்டும். அது உங்களுக்கு நினைத்து பார்க்கமுடியாத அன்பை, ஆனந்தத்தை கொண்டு வரும். 

ஃபெமினா  ஆகஸ்ட் 2021





கருத்துகள்