சிறந்த வடிவமைப்பாளர் 2022 - அல்ஃபோன்சோ அல்பைசா - நிஸான்

 






அல்ஃபோன்சோ அல்பைசா, வடிவமைப்பாளர், நிஸான்


கார்களின் வடிவமைப்பு துறை என்பது முக்கியமானது. அதில் வடிவமைப்பாளராக சாதனை படைத்து வருபவர், அல்ஃபோன்சோ அல்பைசா. இவர், நிஸான் நிறுவனத்தின் குளோபல் டிசைன் குழுவின் துணை தலைவராக பதவி வகிக்கிறார். 

ஜப்பானின் மா எனும் மினிமலிச வடிவத்தை பின்பற்றி கார்களை வடிவமைத்து பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். கடந்த இருபது மாதங்களில் மின்வாகனங்கள் முதல் பிற வாகன மாடல்கள் வரை அனைத்து வாகனங்களின் வடிவமைப்பும் அல்ஃபோன்சாவின் கைவண்ணத்தில் மேம்பட்டிருக்கிறது. ஆரியா முதல்  இசட் எனும் கார் வரை இப்படி கூறலாம். தி ரோக், பாத் ஃபைண்டர், ஃபிரண்டியர் ஆகிய கார்களின் வடிவமைப்பும் மேம்பட்டு வருகிறது. இதற்காகத்தான் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வடிவமைப்பாளர் அங்கீகாரம் பெற்றுள்ளார். 




இசையில் கைத்தட்டுகளுக்கு இடையில் வரும் மௌனத்தைத்தான் மா என்று குறிப்பிடுவார்கள். இது வெறுமை அல்ல, ஒருவகையான அழுத்தம் எனலாம். இதனை குறிப்பிட்ட இசை அலைகள் என்றும் கூறலாம். நாங்கள் நிசான் கார்களின் வடிவமைப்பை இந்த தன்மையுடன் தான் வடிவமைக்கிறோம். சில குறிப்பிட்ட விஷயங்களை வைத்தே வடிவமைப்பை முழுமையாக நிறைவு செய்கிறோம்.  

நிஸான் கார்களின் அடுத்து வரும் 23 கார்களுக்கான வடிவமைப்பில் அல்ஃபோன்சோவின் குழு பரபரப்பாக இயங்கி வருகிறது.  2030ஆம் ஆண்டுக்குள் 15 பேட்டரியில் இயங்கும் கார்களை சந்தைக்கு கொண்டுவருவது நிஸானின் திட்டமாக உள்ளது. 

நியூஸ்வீக் 19.4.2022



கருத்துகள்