மார்க்கெட்டைப் புரிந்துகொண்டு வளர வேண்டும்! - ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு

 






ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு



ஐஸ்வர்யா ரெட்டி

நிறுவனர், கென்சு

ஐஸ்வர்யா, இந்திய வடிவமைப்பில் சற்று நவீனத்துவத்தை குழைத்து பல்வேறு நாற்காலிகள் மற்றும் உள் அலங்காரங்களை செய்து வருகிறார். இவரது வடிவமைப்பு மூலம் தொன்மையான இந்திய வடிவமைப்பில் அமைந்த பொருட்கள் நவீனத்துவ அழகுடன் மிளிர்கின்றன. 2019ஆம் ஆண்டில்தான் கென்சு என்ற சொகுசு பொருட்களுக்கான நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். 


உங்கள் தொழிலில் முக்கியமான ஊக்கம் என்ன?

எனது தந்தை நாகராஜ் ரெட்டி, எனக்கு பெரும் ஊக்கம் தருகிறார். குறிப்பிட்ட காலத்தில் வணிகம் செய்யும் நாகராஜ் பல்வேறு சவால்களை சந்தித்து தொழிலை செய்தவற்கான ஊக்கத்தை எனக்கு கொடுத்திருக்கிறார். 

நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

மார்க்கெட்டை புரிந்துகொண்டு காலத்திற்கேற்ப மாறி வளர்ச்சி பெறவேண்டும் என்பதைத்தான் கற்ற பாடம் என்பேன். 

தொழில்முனைவோராக நீங்கள் கூற நினைக்கும் அறிவுரை என்ன?

பொறுமை விடாமுயற்சி தொழிலுக்கு முக்கியம். எதுவுமே இல்லாமல் அடிப்படையின்றி முன்னேறி வளர்வது எளிதல்ல. நமக்கான நெட்வொர்க்கை நாம் உருவாக்கிவிட்டால் தொழிலை எளிதாக  செய்ய முடியும். வாடிக்கையாளர் கொடுக்கும் கருத்துகளை திறந்த மனதுடன் பெற்று நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 

ஃபெமினா 








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்