செம்பு, பிளாட்டினத்தின் தோற்றம்!

 














தெரியுமா?
செம்பு

தொன்மைக் காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய முதல் உலோகம், செம்பு என புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  கி.மு. 8000 இல், அன்றைய மனிதகுலம் கற்களுக்குப் பதிலாக செம்பை பயன்படுத்த தொடங்கினர் என மானிட ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். கி.மு. 4000இல், எகிப்தியர்கள்  செம்பை உருக்கி அச்சுக்களில் பயன்படுத்த தொடங்கினர்.  பிற்காலங்களில் செம்புடன்,தகரத்தை சேர்த்து வெண்கலத்தை உருவாக்கப் பயன்படுத்தினர். பொதுவாக செம்பை எளிதாக உருக்கி, பல்வேறு வார்ப்புகளைச் செய்யலாம். இதன் காரணாக, மக்கள் வீட்டுக்குப் பயன்படும் குழாய்களைச் செய்ய செம்பையே நாடினர்.  

பிளாட்டினம்

1500களில் ஸ்பெயின் நாட்டினர், பிளாட்டினத்தை முதல்முறையாக கண்டுபிடித்து ஆவணப்படுத்தினர்.  பிளாட்டினா டெல் பின்டோ (Platina del pinto)என்ற வார்த்தையிலிருந்துதான் பிளாட்டினா என்ற வார்த்தை உருவானது. இதற்கு சிறிய வெள்ளி என்று பொருள். மக்கள் தொடக்கத்தில் இதனை, தூய்மைப்படுத்தப்படாத வெள்ளி என்று முதலில் கருதினர். 

சுரங்கத்தில் இரும்பு மற்றும் மெக்னீசியம் மிகுந்துள்ள பாறைகளில் இருந்து பிளாட்டினம் அதிகளவு பெறப்படுகிறது. பொதுவாக பிளாட்டினத்துடன் பல்லாடியம், இரிடியம், ரோடியம் ஆகிய உலோகங்கள் கலந்து காணப்படுகின்றன. பெரும்பாலான பிளாட்டினம் சிறு துகள்களாகவே பெறப்படுகிறது.  க்யூப் வடிவிலான பிளாட்டினம் (Cube shaped Crystal) என்பது அரிதாகவே சுரங்கங்களில் கிடைக்கிறது. 

தகவல்

Nature guide rocks and minerals


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்