குழந்தைகளின் தத்தெடுப்பு குறைந்துவருகிறது!

 














இந்தியா போன்ற பல்வேறு மக்கள், இனக்குழுக்கள், சமயங்கள், கலாச்சாரங்கள் உள்ள நாட்டில் த த்தெடுப்பது என்பது எளிதாக நடக்க கூடியது அல்ல. சொந்த ரத்த த்தில் குழந்தை உருவாக வேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். இதனால், வெளிநாடுகளில் உள்ளவர்கள் த த்தெடுப்பதை எளிதாக செய்துவிட இந்தியர்கள் இதனை ஏற்பதில் இன்னமும் தயக்கம் காட்டுகின்றனர். தத்தெடுப்பதை முறைப்படி செய்ய அரசு அமைப்பு காரா உள்ளது. இந்த அமைப்பில் பதிவு செய்தால் உடனே குழந்தை கிடைத்துவிடாது. அதற்கென நீங்கள் தவமே செய்யவேண்டும். 

ஏன் என்று கேட்டால், அரசு அமைப்பில் உள்ள நடைமுறை சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் பத்து முதல்  ஐந்து மணிக்குள் தான் செய்வார்கள். எனவேதான் இந்த தாமதம் நேருகிறது. இன்னொரு சிக்கல், அரசு அமைப்பு செய்வதால் எந்த தவறும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பயமும் அதிகாரிகளை உலுக்குகிறது.

2010ஆம் ஆண்டு தொடங்கி, இன்றுவரையில் இந்தியாவில்  குழந்தைகளை த த்தெடுப்பது சற்றே வளர்ந்து மிகவும் தேய்ந்த தொனியில் சென்றுகொண்டிருக்கிறது. இந்திய மாநிலங்களில் குழந்தைகளின் த த்தெடுப்பில் மகாராஷ்டிரம் முன்னிலையில் உள்ளது. அடுத்து தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் உள்ளன. 








காரா என்றோமே அதற்கு சென்ட்ரல் அடாப்டேஷன் ரிசோர்ஸ் அத்தாரிட்டி என்பது முழுநீள பெயர். இந்த அமைப்பில் பதிவு செய்தவர்களுக்கு குழந்தைகளை த த்தெடுத்து வளர்க்க அனுமதிக்கின்றனர். இதற்கென வீட்டுக்கு அரசு அதிகாரிகள் வந்து சோதிப்பது எல்லாம் நடக்கும். குழந்தைகளை பிறர் தத்தெடுப்பதில் சில  முறைகள் உள்ளன. இரண்டு வயதிற்குள் உள்ள குழந்தைகள், எந்த உடல், மனநிலை பிரச்னையும் இல்லாதவர்கள் என தேர்ந்தெடுத்து குழந்தைகளை தேவை என்று கூறுகின்றனர். வளர்ந்த சிறுவர்கள்,சிறப்புக்குழந்தைகளை வெளிநாட்டினர் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். 

தற்போதுவரை மொத்தம் 28 ஆயிரம் பேர் காராவில் குழந்தைக்காக பதிவு செய்துள்ளனர். அரசு காப்பகங்களில் 2 லட்சத்து 27ஆயிரத்து 518 குழந்தைகள் உள்ளனர். இதில் 2 ஆயிரத்து 200 குழந்தைகள் சட்டப்பூர்வமாக எளிதாக தத்தெடுக்கும் நிலையில் உள்ளனர். எங்கே நடக்கிறது பிரச்னை என்றால், மாநிலத்தில் இயங்கும் பல்வேறு குழந்தைகள் காப்பகங்கள் அரசின் த த்தெடுக்கும் அமைப்புடன் இணைக்கப்படுவதில்லை. இதனால் அரசுக்கு குழந்தைகளின் இருப்பு தெரிவதில்லை. இப்படி இணைக்கப்பட்டாலும் அவர்களைப் பற்றிய விவரங்களை ஆவணங்களாக தயாரிக்கும் பணி ஆண்டுக்கணக்கில் ஆமையாக நகரும். பிறகுதான் அவர்களை சட்டப்பூர்வமாக தத்தெடுக்கும் பணி நடைபெறும். 

இப்படி தத்தெடுக்கும் குழந்தைகளின் சாதி, குலம், கோத்திரம்  கேட்கும் அசிங்கங்கள் நடப்பதெல்லாம் தனிக்கதை. இதில் திருப்தியானபிறகு சிலர் குழந்தைகளை பரிசுத்த இதயத்துடன் வளர்க்க கூட்டிச்செல்கின்றனர். தேவனுக்கே மகிமை ... வேறென்ன சொல்லுவது? 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், குழந்தைகளை தத்தெடுப்பது பெரிய கடினம் கிடையாது. நீங்களே அதற்கான மையத்திற்கு சென்று குழந்தைகளை வளர்க்க அனுமதி பெற்று கூட்டி வந்துவிடலாம். ஆனால் இன்று சூழல் அந்தளவு எளிமையாக இல்லை.  குழந்தையை வளர்த்து உறவுகளை உருவாக்கிக் கொள்வதற்கு ரத்தம் முக்கியமான கருவியாக இருக்க அவசியமில்லை. 



 

தி இந்து 

திவ்யா காந்தி

Parents in waiting - divya gandhi

the hindu march 20, 2022

---------------------------

Pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்