ஆஃப்லைனில் தூங்கும் செயற்கை நுண்ணறிவு!
டெமிஸ் ஹஸாபிஸ்
நிறுவனர், டீப்மைண்ட்
சாதாரண முறையில் கண்டறிய முடியாத என்னென்ன விஷயங்களை நாம் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறியலாம்?
ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகள் தனியாக யோசித்து அறிவியல் கோட்பாடுகளை இப்போது கண்டுபிடிப்பது கடினம். அறிவியல் முறைகள் மிகவும் சிக்கலானவையாக மாறிவிட்டன. இன்று தனியாக ஒருவர் தொழில்நுட்ப உதவியின்றி புதிய விஷயங்களை அதில் கண்டுபிடிப்பது கடினம். இப்போது உயிரியல் துறையில் இயற்பியல் நுட்பங்களை பயன்படுத்துவது கடினம். ஆனால் அதனை கணினி அறிவியலும், செயற்கை நுண்ணறிவும் செய்கிறது. நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
செயற்கை நுண்ணறிவை நீங்கள் உங்கள் ஆராய்ச்சிக்கு உதவியாளராக பயன்படுத்தமுடியும். இதன்மூலம், ஆராய்ச்சி செய்பவர்களுக்கு வேலைச்சுமை குறைகிறது. அவர்கள் புதுமைத்திறன் கொண்டதாக வேறு விஷயங்களை யோசிக்கலாம்.
ஆல்பாபோல்ட் போன்ற செயற்கை நுண்ணறிவு குறிப்பிட்ட ஒரு வேலையை மட்டுமே சரியாக செய்யலாம். அனைத்து வேலைகளையும் சரியாக செய்யமுடியாது என்று கூறுகிறார்களே? பொதுவான பல்வேறு பணிகளைச் செய்ய நாம் இன்னும் யோசித்து செயற்கை நுண்ணறிவை மாற்றவேண்டுமா?
இல்லை. இது சரியான விமர்சனம்தான். நாங்கள் இப்போது ஆல்பாஜீரோ எனும் இருவர் விளையாடும் விளையாட்டை உருவாக்கியுள்ளோம். இதில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. ஆனால் இந்த அல்காரிதம், அனுபவங்களிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறது. பொதுவான அல்காரித முறையில் நாம், செயற்கை நுண்ணறிவை தயாரித்தால் சிலருக்கும் பிடிக்கும். சிலருக்கு அது பிடிக்காது. இதில் உள்ள அறிவை பிறருக்கு மாற்ற முடியாது. இந்த துறை சார்ந்த ஆராய்ச்சி செய்யும் தேவை உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இப்போது நான் அதுபற்றித்தான் ஆய்வு செய்து வருகிறேன். நீங்கள் கேட்கும் கேள்வியை சாதிக்க நிறைய மாதிரிகள் தேவையிருக்கிறது.
மாதிரிகள் எதற்காக?
அவை மூளையைப் போல இருக்கவேண்டாமா? மூளையில் உள்ள சிறு சிறு பகுதிகள் நமது பல்வேறு செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. நான் முனைவர் படிப்பைப் படிக்கும்போது, ஹிப்போகாம்பஸ் பற்றி படித்துள்ளேன். இந்தப்பகுதிதான் ஒருவர் கற்றுக்கொடுப்பதை உள்வாங்கி கொள்ளும்பகுதி. இந்தப்பகுதி உயிர்த்துடிப்பாக இருப்பவர்கள், வேகமாக நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள். இப்போதையை செயற்கை நுண்ணறிவுப்படி, உங்களுக்கு வேகமாக பைக் ஓட்டக்கற்கவேண்டுமெனில், அதற்கு முன்னர் கற்றுக்கொண்ட பியானோ பாடங்களை அழிக்கவேண்டும். அப்போதுதான் பைக் ஓட்டுவதை எளிதாக கற்க முடியும். பொதுவாக நமது தூக்கத்தில் நமது மூளையிலும் இச்செயல்பாடு தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
ஏஐக்கும் தூக்கம் தேவையா?
தூக்கம் என்று கூறமுடியாது. ஆனால் ஆஃப்லைனில் இருக்கிறது என வரையறுத்து கூறலாம். அடாரி என்ற வீடியோ விளையாட்டு உள்ளது. அதனை விளையாடும்போது, முன்னர் விளையாடியவற்றை ஏஐ நினைவில் கொண்டுவந்துதான் விளையாடுகிறது. இந்த நினைவுகள்தான் ஏஐயின் பெரும்பலம். இதனை நீங்கள் தூக்கம் என்று கூட கூறலாம்.
டிமோத்தி ரேவெல்
நியூ சயின்டிஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக