சூழல் செய்திகள்- ஊழியர்களுக்கு சைக்கிள் கொடுத்த நிறுவனம், கடற்புரத்தை சுத்தம் செய்யும் மனிதர்!

 








pixabay




சூழல் செய்திகள்
முட்டுக்காடு சூழல் காப்பாளர்!



முட்டுக்காட்டில் வாழ்ந்து வருபவர், கிரேஷியன் மேத்யூ கோவியாஸ். இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக கடற்கரையில் அலைகள் கொண்டு வந்து போடும் குப்பைகளை பொறுக்கி தனியாக அதனை ஒரு இடத்தில் போட்டு வருகிறார். இதன்மூலம் சூழலுக்கான ஆபத்து தவிர்க்கப்படுகிறது. 

கடல் அலையில் ஒதுக்கப்படும் மரப்பொருட்களை இவர் புகைமூட்டம் போட எடுத்துச்செல்கிறார். மரம் உப்பில் ஊறி விட்டால் அதனை எளிதாக விறகாக பயன்படுத்த முடியாது. ஆனால் அதில் நிறைய புகை வரும். அதனை வைத்து தான் வாழும் வீட்டில் கொசுக்கள், பூச்சிகளை விரட்ட பயன்படுத்திக்கொள்கிறார்.

வீட்டில் இருந்து கடற்கரைக்குப் போகும்போதே அலுமினிய கண்டெய்னர் ஒன்றை எடுத்துச் செல்கிறார். அதில், கடற்கரையோரம் அலை ஒதுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கிறார். இப்படித்தான் பிளாஸ்டிக் பொருட்கள் சூழலைக் கெடுக்காமல் அதனை அப்புறப்படுத்தி வருகிறார். 

அனைவருக்கும் சைக்கிள்

இப்படி கூறுவதற்கு இது அரசு திட்டமல்ல. மணலியில் செயல்படும் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் சைக்கிள்களை ஊழியர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் மொத்தம் 142 ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே பிராண்ட் சைக்கிளை வழங்கியுள்ளனர். தொடக்கத்தில் முக்கியமான அதிகாரிகளுக்கு மட்டும் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. பிறகுதான், அனைவருக்கும் சைக்கிள் வழங்கினால் என்ன என்று நிறுவனத்திற்கு தோன்றியுள்ளது. 

எனவே, சைக்கிள்களை ஆர்டர் செய்து ஊழியர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளனர். நிறுவனத்திற்கு வரும் ஊழியர்கள் பலரும் மணலியில் அதை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வருகிறார்கள். ஊழியர்களுக்கென போக்குவரத்து வசதிகளையும் நிறுவனம் செய்து கொடுக்கிறது. இப்படி சைக்கிள்களை வழங்குவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் காக்கப்படுவதோடு, எரிபொருள் பிரச்னையும் இருக்காது என நிறுவனம் கருதுகிறது. 

ஊழியர்கள் அனைவருக்கும் சைக்கிள் வழங்கப்பட்டு வருவதால், சைக்கிள் கிடைத்தவர்கள் அதனைப் பயன்படுத்தி அலுவலகம் வரத் தொடங்கியுள்ளனர். ஒருவகையில் இது சூழலுக்கான முக்கியமான பங்களிப்பாக இருக்கும் என்று கூறலாம்.  

தி இந்து

டவுண்டவுன்


கருத்துகள்