இடுகைகள்

நூல் வாசிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தவார புத்தக வாசிப்பு!

படம்
ரஷ்யாதான் 1959 ஆம் ஆண்டு விண்கலனை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அந்நாட்டை முந்தும் வேகத்தில் அமெரிக்கா, மனிதர்களை தயாரித்து நிலவுக்கு அனுப்பியது மிகப்பெரும் சாதனை. இன்றும் நாம் பிஎஸ்எல்வியா, ஜிஎஸ்எல்வியா என தடுமாறும் நிலையில் 1969 ஆம் ஆண்டு துணிச்சலாக கருவிகளோடு மனிதர்களையும் அனுப்பிய அதிபர்  ஜான் எஃப் கென்னடி மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் முயற்சிகள், பிரச்னைகள் ஆகியவற்றை அனுபவக்கட்டுரைகளாக பகிர்கிற நூல் இது. வயதாவது என்பது பலவீனமாக பார்க்கும் சமூகம் மேற்கத்தியது. ஆசியாவில் அதனை பெரும் பலமாக, பல்வேறு பொறுப்புகளை கொடுக்க நரைத்த முடி உதவுகிறது. இன்னும் ஐந்தே ஆண்டுகளில் 50 வயது தொடங்கினாலே ஏன், 40 தொடங்கினாலே பெருசு என்று கூறத் தொடங்விடுவார்கள். நிலைமை அந்தளவு மாறியுள்ளது. இச்சூழலில் நாற்பது வயது ஆட்களின் சூழல், மனநிலைமை, அவர்களின் பிரச்னைகள் ஆகியவற்றைக் குறித்து இந்த நூல் பேசுகிறது. உலகில் அதிக விலைக்கு விற்கப்படும் உணவுப்பொருள் ட்ரஃபிள். இது ஒரு பூஞ்சை என்றால் நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள். நூல் முழுக்க பூஞ்சை ஏன் அதிக வில

கோடைகால புத்தகங்கள்!

கோடைகால புத்தகங்கள் ! The Insect Boy Series  Scholastic Early Science Shobha Viswanath karadi tales பூச்சிகளை வெறுக்கும் சிறுவன் ராய்க்கு , அந்த உலகத்துடன் ஆச்சரியகரமான உறவு உண்டாவதுதான் கதை . பல்வேறு பூச்சிகளைப் பற்றிய அறிமுகத்தையும் சிறப்பான படங்களுடன் தரும் அழகிய நூல் இது . Treasure at the train station: an adventure in mumbai,  joeanna sarkar Goodearth மும்பையின் விக்டோரியா டெர்மினஸில் உள்ள பொக்கிஷத்தை பல்வேறு புதிரான குறிப்புகளின் கண்டறிவதுதான் சுவாரசிய கதை . The Crocodile's tail sayoni basu, karadi tales குமீர் என்ற முதலை நரியை டின்னராக்க முயற்சிக்கிறது . முதலையின் ஆசைக்கு துணையாக அதன் நண்பன் நண்டுவும் உதவுகிறது . நரி முதலையிடம் மாட்டியதா ? இல்லையா ? என்பதே கதை .