இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய - ரஷ்ய ஆயுத ஒப்பந்தம் -பிளஸ் மைனஸ் என்ன?

படம்
டீலா? நோ டீலா? – இந்தியா ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட இரு நாடுகளுடன் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் அரசியல் உறவுகளை கொண்டுள்ளது. அமெரிக்கா ‘எங்களோடு இணைந்த நாடுகள் நண்பர்கள் இணையாதவர்கள் பகைவர்கள்’ என மூர்க்கமாக பொருளாதாரத்தடைகளை முடுக்க இந்தியா- அமெரிக்கா- ரஷ்யா உறவு தீவிரமான சிக்கலாக மாறியுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் – மோடி சந்திப்பில் S-400 வகை வான் தடுப்பு ஆயுதங்கள், காமோவ் ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள், ரைஃபிள்கள் வாங்கவுமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரஷ்யா, இரான் ஆகிய நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக அமெரிக்கா CAATSA சட்டம் மூலம் இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்க வாய்ப்புள்ளது. 2025 ஆம் ஆண்டில் 25 பில்லியன் டாலர்கள் வணிகம் என்ற நோக்கில் ரஷ்யாவும் இந்தியாவும் முன்னேறி வருகின்றன. ரஷ்யாவின் சுரங்கம், எண்ணெய் சுத்திகரிப்பு தொழில்களில் இந்தியா முதலீடு செய்ய புடின் விரும்புகிறார். ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்துகளில் ரஷ்யா இந்தியாவுடன் இணைந்து திட்டங்களை மேற்கொள்ள எதிர்காலத்தில் வாய்ப்புள்ளது. இந்தியா 70 சதவிகித ஆயுதங்களை ரஷ்யாவிட

ஐஎம்எஃப் - கீதா கோபிநாத் சாதித்தது எப்படி?

படம்
கீதா கோபிநாத் சாதித்தது எப்படி? ஏழு வயதில் தன் மகள் கீதாவுக்கு உணவு மேசையிலிருந்த பழங்களை வைத்து பெருக்கல் வாய்பாட்டை சொல்லிக் கொடுத்தார் மைசூரைச் சேர்ந்த டி.வி கோபிநாத். அவரே பிரம்மிக்கும்படி பன்னாட்டு நிதியகத்தின்(IMF) பொருளாதார நிபுணராக பதவியேற்று உலக பொருளாதாரத்தை ஆராய்ந்து வருகிறார் கீதாகோபிநாத். 1971 ஆம் ஆண்டு டிச.8 அன்று கொல்கத்தாவில் பிறந்தார் கீதா. வங்கதேச போர்காலத்தில் பிறந்த கீதாவுடன் அவரது பெற்றோர் மைசூருவிலுள்ள பிலிகெரே கிராமத்துக்கு திரும்பினர். தற்போது, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் உலக உறவுகள் துறையின் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டில் ஆர்வம் காட்டி படிப்பில் 45 சதவிகித மார்க் வாங்கிய கீதா, திடீரென விளையாட்டு பயிற்சிகளை கைவிட்டு படிப்பதில் வேகம் காட்டி 95% மதிப்பெண் வாங்கி ஆசிரியர்களை வியக்க வைத்தார். “விளையாட்டில் நம்பர் 1 க்குத்தான் மதிப்பு, ஆனால் படிப்பில் இரண்டாமிடம் வருபவர்களுக்கும் சாதிக்க வாய்ப்புள்ளது” என அப்பாவிடம் கூறியுள்ளார். மருத்துவா, பொருளாதாரமாக என குழப்பத்திலிருந்த கீதா, பொருளாதாரத்தை தேர்ந்தெடுத்து

ஹவாயை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் நாடாளுமன்ற உறுப்பினர்!

படம்
சக்தி! Mazie Hirono ” அமெரிக்க சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய என்னுடைய பயணம், கல்லூரியில் வியட்நாமிய போருக்கு எதிராக ஒன்றுதிரண்டபோது தொடங்கியது ” என புத்துணர்வாக பேசும் மேசி ஹிரோனோ அமெரிக்காவின் முதல் ஆசிய –அமெரிக்க சட்டசபை உறுப்பினர். 1947 ஆம் ஆண்டு நவ.3 அன்று ஜப்பானின் புகுஷிமாவில் பிறந்த மேஷி ஹிரோனா, தன் எட்டு வயதில் தாயுடன் அமெரிக்காவுக்கு வந்து அந்நாட்டு குடிமகளானார். 1994-2013 வரை ஹவாய் சட்டமன்ற உறுப்பினர், கவர்னர், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்த மேசி, ஜனநாயக கட்சி உறுப்பினர். “ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை காக்கப்படவேண்டும்” எனும் மேசி, ஹவாயிலுள்ள பொதுப்பள்ளி, பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.  “அமெரிக்க மாநிலமான ஹவாய் மக்களின் பிரதிநிதியாக மக்கள் முன் நிற்கும் தைரியத்தை என் அம்மாவிடமிருந்து பெற்றேன். பொருளாதார பலமில்லாது அமெரிக்காவில் நுழைந்து என்னை வளர்த்த அவரிடமிருந்து கற்றது ஏராளம்” எனும் மேசி, ராணுவத்தில் சூழலுக்கு இசைவான பொருட்கள், புதுப்பிக்கும் ஆற்றல்கள் ஆகியவற்றை பிரசாரம் செய்து வலியுறுத்தி பேசியுள்ளார். “நாம் யாருக்காக

இதயநோய் அதிகரிப்பு காரணம் என்ன?

படம்
முத்தாரம் Mini அமெரிக்காவில் இதயநோய்களால் இறப்பவர்களின் அளவு 41% ஆக(1990-2016) குறைந்துள்ளது. அதேவேளையில் இந்நோயின் தாக்கம் இந்தியாவில் 34% அதிகரித்துள்ளதே? தெற்காசியர்கள் மற்றும் இந்தியர்களுக்கு ஏற்படும் இதயநோய் சிக்கல்களுக்கு என்ன காரணம் என உண்மையிலேயே தெரியவில்லை. இன்று பெரும்பாலும் வெளிவரும் ஆய்வுகள் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கானவை. இந்தியர்களை மாவுச்சத்தை அடிப்படையாக கொண்ட உணவுப்பழக்கம், புகைப்பிடித்தல், அதிகரிக்கும் லிப்போபுரோட்டின் அளவு ஆகியவற்றை இந்தியர்களின் இதயநோய் பிரச்னைக்கு காரணமாக கூறலாம். 25 - 30 வயதுக்குள் ஒருவரை இதயநோய் தாக்குவதற்கு என்ன காரணம்? அமெரிக்கர்களுக்கு பதினாறு வயதில் இதயநோய்களுக்கான அறிகுறிகள் தொடங்குவதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 25-30 வயதுக்குள் இதயநோயால் தாக்கப்படும் தெற்காசியர்களின் எண்ணிக்கை உலகிலேயே அதிகம். உணவும் வாழ்க்கை முறையும் காரணம் என்றாலும் துல்லியமான ஆராய்ச்சிகள் கிடையாது என்பதே உண்மை. இதயமருத்துவத்தில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? பேஸ்மேக்கர், இதயமாற்று சிகிச்சை, செயற்கை இதயம், ஆஞ்சியோகிராப

கண்ணீர் வருவது எதனால்?

படம்
ஆனந்த கண்ணீரே! கண்கள் சிரமமில்லாமல் நகர்வதற்கு கண்களில் ஈரப்பதம் தேவை. கண்களின் மேல், கீழ் இமைகளை கன்ஜங்டிவா எனும் மெல்லிய இழை இணைக்கிறது. 2-10 நொடிகளுக்கு ஒருமுறை கண்களை இமைப்பதன் மூலம் கண்களில் உருவாகும் ஈரப்பதம் வற்றாமலிருக்கிறது. கண்ணீர் கண்களுக்கு ஆக்சிஜனையும் ஊட்டச்சத்துக்களையும் கண்களுக்கு வழங்குகிறது. பாக்டீரியா மற்றும் பல்வேறு தூசு தும்புகளை வெளியேற்ற கண்ணீர் மட்டுமே ஒரே வழி. கண்ணீர் வெளிவராதபோது கண்ணின் உள் அடுக்குகளில் காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆண்களை விட பெண்கள் அழக்காரணம், அவர்களின் உடலிலுள்ள 60 சதவிகித புரோலேக்டின் வேதிப்பொருளே காரணம். நாளமில்லா சுரப்பிகளை இவைகளே தூண்டி பெண்கள் சிறுசிறு துளிகளாக கண்ணீரை சிந்த வைக்கின்றன. அதிர்ச்சி, ஆனந்தம், கோபம், துக்கம் மட்டுமல்ல சிரிப்புக்கும் வரும். வயிற்றிலுள்ள தசைகள், முகதசைகள் இணைந்து நாளமில்லா அமைப்பை தூண்டுவதால் தொடர்ந்து சிரிக்கும்போது கண்ணீர் வருகிறது. அழுவது கண்களிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கவும், நம் மனநிலையை மாற்றவும் உதவுகிறது. அழும்போது உடலில் ஆக்சிடோசின், எண்டோர்பின் வேதிப்பொருட்கள் வெளிவருவதால

மனித உரிமைகள் பேசும் ஹாலிவுட் நாயகி!

படம்
அமண்ட்லா ஸ்டென்பெர்க் ''எனக்கு எது பொருத்தமான துறை என இன்னும் முடிவு செய்யவில்லை. இதுதான் என எதிலும் அடைத்துக்கொள்ள விரும்பவில்லை '' என உற்சாகமாக சொல்கிறார் அமண்ட்லா.  ஹங்கர் கேம்ஸ், எவ்ரிதிங் எவ்ரிதிங், தி டார்க்கெஸ்ட் மைண்ட்ஸ் படத்தில் நடித்தவர் என்பதைத் தாண்டி சமூக செயல்பாட்டாளர், தன் தலைமுறையின் விமர்சனக்குரல் என்பதாக நீளும் இவரின் ஆளுமை யாரையும் ஆச்சரியப்படுத்தக்கூடியது.  எனது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அரசியல்மயப்படுத்தப்படும் ஆபத்து இருப்பதால் கவனமாகவே செயல்பட்டு வருகிறேன் என பரிபக்குவமாக பேசுபவருக்கு வயது இருபது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  சோஷியல் தளங்களை கெடுக்கும் பல்வேறு நிறுவனங்களைப் பற்றிய பதிவுகளும் தன்னைத்தானே கிண்டல் செய்து போடும் வீடியோக்களும் அமண்ட்லா பிராண்ட் ஸ்பெஷல். கடந்தாண்டு ஆஞ்சி தாமஸின்  நாவலைத் தழுவி உருவான தி ஹேட் யூ கிவ் எனும் படத்தில் நடித்தார். போலீஸ் ஆயுதம் ஏதுமற்ற கருப்பின இளைஞரை கொன்றதை எதிர்த்து நீதி கேட்கும் செயல்பாட்டாளராக நடித்திருந்தார்.  பணம் சம்பாதிப்பது தாண்டி தான் எப்படி செயல்படவேண்டுமென்ற நிதானமும் இவருக்கு இ

நோர்வீஜியன் வுட்! - தோற்றுப்போகும் திரைப்பிம்பம்

படம்
நோர்வீஜியன் வுட்: காமமே காயகல்ப மருந்து! நாவல் ஹாருகி முரகாமி எழுதிய நோர்வீஜியன் வுட்டில் டோரு வாட்டனபி கிஸூகியுடன் டபுள் டேட்டிங் செல்லும்போதுகூட பரிதவிப்பிலேயே இருக்கிறான். காரணம், கிஸூகியின் பால்ய கால தோழியும் காதலியுமான நவோகோ தன்னை ஏதாவது கூறுவாளோ என்ற தடுமாற்றம் மூவரும் சேரும் கணம் தோறும் ஏற்படுகிறது. பின்னாளில் நவோகோவுடன் கிஸூகி பற்றி பேசாதவரையில் உறவு சிறப்பாகவே செல்கிறது. நவோகோ, மனதும் உடலும் ஒருங்கிணையாத பெண். இறந்த காலத்தை தோண்டினால் அவளது குடும்பவே மனச்சிதைவு கொண்டதாக உள்ளது. உதாரணம்: படிப்பில் வென்ற நவோகோவின் சகோதரி அறையில் தற்கொலை செய்துகொள்ளும் பகுதி. டோரு, பல்கலைக்கழகத்தில் படிப்பதோடு செலவுக்கு வார நாட்களில் பல்வேறு வேலைகளை செய்து சம்பாதித்தபடி இருக்கிறார். கல்லூரி வேலை நிறுத்தம், ஜப்பானின் சமகால பிரச்னைகள் என எதுவும் நாவலில் கிடையாது. ஒட்டநறுக்கிய அகவுணர்வுகளின் துல்லியம் கூடுவது இதனால்தான். நவோகோ, மிடோரி,  ஹாட்சுமி, ரெய்கோ ஆகியோருடனான உறவு இணக்கமும் அதேவிதத்தில் விலகலும் கொண்டிருக்கிறது. பீட்டில்ஸ் இசைப்பகுதி ஒலிக்கும்போது நவோகோவும் டோருவ

முதுகுளத்தூரில் நடந்த உண்மை!

படம்
முதுகுளத்தூர் பயங்கரம் - கலவரம்! தொகுப்பு: மயிலை நாதன் எழுத்தாக்கம்: டி.எஸ்.சொக்கலிங்கம் - தினகரன் வெளியீடு: சிந்தனை ரூ.90 டி.எஸ்.சொக்கலிங்கம் -தினகரன் ஆகியோர் முதுகுளத்தூரில் களசாட்சியாக நின்று பதிவு செய்த தரவுகளை எழுதியுள்ளனர். மு.தே எப்படி அங்குள்ள படிப்பறிவற்ற தன் இன மக்களை அவர்களின் பிரச்னைகளுக்கு பிற இனத்தவர்கள் காரணம் என வன்முறையை தூண்டிய வரலாற்றை துல்லியமாக பதிவு செய்துள்ளனர்.  காங்கிரஸ் இக்காலகட்டங்களில் செய்த தவறு, ஜாதி ஆதிக்கத்தை கையிலெடுத்து தன்னுடைய கிராமங்களில் குறுமன்னர் போல ஆண்டு வந்த மு.தேவரை  தேர்தலில் தன் கட்சி வேட்பாளராக நிறுத்தியதுதான். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் தவறை முதல்வர் காமராஜர் நேர் செய்தார்.  முதுகுளத்தூர் பகுதியில் பள்ளர்களை மு.தே தமக்கு மட்டுமே வாக்களிக்க பிராமிசரி நோட்டில் கையெழுத்து வாங்குமளவு நிலைமை மாறியிருந்ததும், காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டவர்களை தாக்கியதும், விளைச்சலை கொள்ளையிட்டதையும், பெண்களை வல்லுறவு செய்ததும், நிலவரி கேட்ட அரசு அதிகாரிகளை தாக்கி காலை வெட்டியதும் படிக்கும்போதே பீதி ஏற்படுத்தும் நிகழ்வுகள். 

தினகரன் தீபாவளி மலரில் என்ன புதுசு?

படம்
தினகரன் தீபாவளி மலர் ஆசிரியர்: கே.என்.எஸ் வடிவமைப்பு: வேதா& கோ ரூ.150 தினகரன் நாளிதழின் மண்சார்ந்த அக்கறையும் அன்பும்  கொண்ட செய்தியாளர்களின் துணையுடன்  குங்குமம் லே-அவுட் டீமுடனும் அடித்து ஆட களமிறங்கியிருக்கிறார் ஆசிரியர் கே.என்.எஸ். சைவ சுடலைமாடன், சீரணி இனிப்பு மிட்டாய்,  கல்லணை முதல் முக்கொம்புவரை, தாலா சாப்பாடு,  ரொட்டேலா பண்டுகா உள்ளிட்ட கட்டுரைகள் பரபர வாசிப்பிலும் கவனத்தை ஈர்க்கும்படி செம்மையாக எழுதப்பட்டுள்ளன. வடிவமைப்பிலும் பட்டுப்புடவைக்கு பொன்சரிகை போல அட்டகாசம்.  நூலெங்கும் முந்திரியாக ராஜாகுமார் அப்புவின் ஹைக்கூ கவிதைகள் நெடும் கட்டுரைகளுக்கு இளைப்பாறுதல்களாக தீபாவளிக்கு இனிமை சேர்க்கின்றன. பழங்குடிகளின் பறிபோன வாழ்வை இதமாக சொல்லி மனதில் கனம் சேர்க்கும் பறிபாடல்(இளங்கோ கிருஷ்ணன்) கவிதை கிளாஸ் டச். தினகரன் தீபாவளி மலரில் ஆன்மிகத்திற்கான பக்கங்கள் குறைவு. ஆனால் மலரை வாசிக்கும்போது உங்களுக்கு அது நினைவிலேயே இருக்காது என்பது கட்டுரைத்தேர்வின் திறமை.  இதழில் இரு சிறுகதைகள் நேர்த்தியாக மனதை கவருகின்றன என்றால் அது மனோஜ் எழுதிய ஞாபகச்சிறகு, கலாப்ப்ர

கல்வியில் தொழில்நுட்ப மேம்பாடு தேவை!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக முனைவர் பட்டதாரியான, மிச்செல் வில்லியம்ஸ், மாணவர்களுக்கு அறிவியல் துறையில் சாதிக்க ஆலோசனைகளை வழங்கி அவர்கள் சாதிக்க உதவுகிறார். 2015 ஆம்ஆண்டு மிச்செல் தொடங்கிய வில்லியம்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம்,  பத்தாண்டுகளுக்கு மேலாக கற்பிக்கும் துறையில் உள்ளார். வகுப்பறை தாண்டிய கல்வியை உறுதியாக நம்புபவர், தன் நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பிராக்டிக்கலாக அறிவியலில் சாதிக்க தொழில்முனைவோர்களுடன் பேசுவது, இணையவடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை கற்பித்துவருகிறார்.  “கல்வியை தொழில்நுட்பம் மூலம் நாங்கள் மேம்படுத்துகிறோம்” என புன்சிரிப்புடன் பேசுகிறார் மிச்செல். ஸ்டெம் எனும் அறிவியல்துறைகளில் மாணவர்களை படிப்பிக்க வேடிக்கையுடன் பாடம் நடத்துபவர், தேசிய அறிவியல் கழகத்தின் CAREER பரிசு பெற்றுள்ளார். கல்வி நிறுவனத்தை மேம்படுத்துவதுடன் பல்வேறு எளிய பயன்பாடுகளுக்கான மென்பொருட்களை தயாரிப்பது, முதலீடுகளை அதிகரிப்பது என பம்பரமாக சுழன்று வருகிறார் மிச்செல் வில்லியம்ஸ்.  

ரஷ்யாவில் செக்ஸ் தினம் எதற்கு?

படம்
ரஷ்யா பற்றி நீங்கள் அறியாதவை! ரஷ்யாவில் தேசிய செக்ஸ் தினம் அதிகாரப்பூர்வமாகவே அனுசரிக்கப்படுகிறது. எதற்கு? குழந்தைகளை நிறைய பெற்றுக்கொள்ளத்தான். அமெரிக்காவின் டிஸ்னிலேண்ட் போல, ராணுவ கருவிகள் ஆயுதங்கள் கொண்ட தீம்பார்க்கில் குழந்தைகளை விளையாட விடுகிறார்கள். ஊழல் மற்றும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் டேஷ்போர்ட்டிலேயே கேமராக்களை ரஷ்யர்கள் வைத்துள்ளனர். ரஷ்யா நாடு முழுக்க பதினொரு காலநேர அட்டவணை பின்பற்றப்படுகிறது. புகைப்படம் எடுக்கும்போது சிரிப்பது முட்டாள்தனம் என முன்னர் ரஷ்யாவில் கருதப்பட்டது.     ரஷ்யாவின் ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்திலுள்ள பொருட்களை எலிகள் சேதப்படுத்தாமல் காவல்காப்பவை 70 பூனைகள். செஞ்சதுக்கம் என்பது கம்யூனிச பாதிப்பால் வந்ததல்ல; Krasnyi என்ற சொல்வே இதற்கு வேர். பொருள், அழகு. இறந்தவர்களுக்கு இரட்டைப்படையிலும், வாழ்பவர்களுக்கு ஒற்றைப்படையிலும் பூக்களை பரிசளிப்பது ரஷ்ய கலாசாரம். உலகில் அதிகளவு(4 வது இடம்) மதுபான பிரியர்கள் கொண்ட நாடு ரஷ்ய தேசம்தான்.

பெரும் கேள்விகளுக்கு எளிய பதில்கள்!

படம்
புத்தகம் புதுசு! The Poison Squad: One Chemist's Single-Minded Crusade for Food Safety at the Turn of the Twentieth Century Deborah Blum 352 pp,Penguin Press 1883 ஆம் ஆண்டு விவசாயத்துறையில் வேதியியலாளராக பொறுப்பேற்ற டாக்டர் ஹார்வி வாஷிங்டன் வில்லி, பாலில் கலந்த பார்மால்டிஹைடு, இறைச்சியில் பதப்படுத்த சேர்த்த போரக்ஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்களை தடை செய்து உணவுப்பொருட்களுக்கான விதிகளை(1906, வில்லி சட்டம்) வலுவாக்கினார். அவர் தொடங்கிய நச்சுதடுப்புதுறை பற்றிய சுவாரசிய தகவல்களை இந்நூல் பகிர்கிறது. Brief Answers to the Big Questions Stephen Hawking 144 pages, Bantam ஐன்ஸ்டீனுக்கு பிறகு உலகறிந்த விஞ்ஞானி அமரர் ஸ்டீபன் ஹாக்கிங், விண்வெளியில் மனிதர்கள் வசிக்கமுடியுமா? கடவுள் உண்டா? என ஏராளமான கேள்விகளுக்கு பதில் கூறியுள்ள நூல் இது.

பன்னாட்டு நிறுவனங்களின் சூழல் படுகொலை!

படம்
மாசுபாட்டில் நெ.1! உலகளவில் இயற்கைச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களின் பட்டியலை க்ரீன்பீஸ் அமைப்பு மற்றும்   Break Free From Plastic (2016)    எனும் இரு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ளன. உலகம் முழுவதும் 42 நாடுகளில் 239 கழிவுகளை அகற்றும் திட்டங்களின் கீழ் 1,87,000 பிளாஸ்டிக் கழிவுகளை ஆராய்ந்து இவ்வமைப்பினர் பட்டியலை உருவாக்கியுள்ளனர்.  குளிர்பான நிறுவனமான கொககோலா முதலிடத்தையும் குளிர்பானம், சிப்ஸ், ஃபாஸ்ட்புட் உணவகங்களை நடத்தும் பெப்சி இரண்டாவது இடத்தையும், உணவுப்பொருட்களை தயாரித்து வரும் நெஸ்லே மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. “பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களை வரிசைப்படுத்துவதன் காரணம், அவை இயற்கை வளங்களை அழித்து பிளாஸ்டிக் மாசுபாட்டை வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கத்தான். இனிமேலும் குப்பைகளை உருவாக்குவதாக மக்களை குற்றவுணர்வுக்கு உள்ளாக்க முடியாது. பிளாஸ்டிக் பொருட்கள் அதிகரிப்பதில் நுகர்பொருள் நிறுவனங்களுக்கும் பங்குண்டு” என்கிறார் பிரேக் ப்ரீ ஃப்ரம் பிளாஸ்டிக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வான் ஹெர்னான்டெஸ்.

நிகரகுவா பாரஸ்ட் கம்ப்!

படம்
அடக்குமுறைக்கு எதிராக ஓட்டம்! உங்களுடைய தாய்நாடு சிறியதாக இருக்கலாம்; ஆனால் கனவு பெரியதாக இருக்கலாம் என்று கூறிய நிகரகுவா கவிஞர் ரூபம் டாரியோவின் வரிகளை சொல்லிக்காட்டியபடி ஓடுகிறார் நிகரகுவாவைச் சேர்ந்த வனேகஸ். நிகரகுவா ஆட்சியாளர் ஆர்டேகாவின் வன்முறை ஆட்சிக்கு எதிராக நூறு டிகிரி வெயிலில் தன் நீரிழிவு நோயையும் பொருட்படுத்தாமல் ஓடுபவரை போலீஸ் புன்னகையோடு பார்க்கின்றனர். “ஆர்டேகாவின் ஊழல் ஆட்சிக்கு எதிரான என்னுடைய முயற்சியை மக்களும் வரவேற்கிறார்கள்” எனும் 63 வயதான வனேகஸ், தினசரி 21 கி.மீ ஓடுகிறார். அண்மையில் நடந்த மாணவர்களின் போராட்டத்தை காவல்துறை கொண்டு முடக்கிய அரசின் மூர்க்கமான வன்முறையால் 36 பேர் இறந்துபோனதை வனேகஸ் மறக்கமுடியாமல் தவித்து ஃபாரஸ்ட்கம்ப் பட டாம் ஹேங்க்ஸ் போல ஓட முடிவெடுத்திருக்கிறார். வணிக மேலாண்மையாளராகவும் டிஜேவாகவும் பார்ட்டியில் பரபரப்பான இருந்தவருக்கு ஏற்பட்ட நிரீழிவு பிரச்னை அவரது வாழ்வை மாற்றியது. பக்கத்து வீட்டிற்கு கூட பெயர்தெரியாமலிருந்த வனேகஸ் இன்று நிகரகுவாவின் தேசிய நாயகனாக மாறியிருக்கிறார். இருமுறை கைது செய்யப்பட்டு கொலைமிரட்டல் விடுக

டெக் புதுசு!

படம்
டெக் புதுசு! Jaquet Droz Signing Machine சினிமா, எழுத்து, தொழில் என பிரபலமாக இருந்தால் நன்கொடை, ரசிகர்கள் என கையெழுத்து கேட்டு வரும் கூட்டத்தை சமாளிக்க 585 பாகங்களைக் கொண்ட இக்கருவி உதவும். இதன் மூலம் ஈசியாக கையெழுத்து போட்டு கைவலியிருந்து தப்பிக்கலாம். ரூ. 3,59,04,015 BllocZero18 ஸ்மார்ட்போன் போதையிலிருந்து மீட்க வந்த ப்ளோக்ஜீரோ போன், ரூட் எனும் நுட்பத்தை பயன்படுத்துகிறது. மோனோகுரோம் ஸ்கிரீன் முதல் பயன்படுத்தும் ஆப்ஸ் வரை சிம்பிளாக இருக்கும். 13 எம்பி கேமரா, 4K வீடியோ என ஸ்மார்ட்போன் அம்சங்களுக்கும் குறைவில்லை. ரூ.35,073 RedKey கணினிகளில் உங்களது   முக்கியமாக தகவல்கள் அழிக்கமுடியாதபடி மாட்டிக்கொண்டுவிட்டதா? சிம்பிளாக ரெட்கீயை வாங்கி யுஎஸ்பியில் பொருத்தினால் அத்தனை தகவல்களும் நிரந்தரமாக அழிந்துவிடும். பிரைவசிக்கேற்ற மென்பொருள். ரூ.6,057 Sennheiser CX Sport விளையாட்டு வெறியர்களுக்கான இயர்போன். சிம்பிளான எடையில் இயங்கும் இயர்போனை ரிமோட் மூலம் இயக்கலாம். ரூ. 11,626

இளைஞர்களை புரிந்துகொள்வது ஈஸி!

படம்
 நேர்காணல் இளைஞர்களை புரிந்துகொள்வது ஈஸி! பேராசிரியர் சாராஜேன் பிளாக்மோர். தமிழில்: ச.அன்பரசு நம்மில் பலருக்கும் இளைஞர்களை புரிந்துகொள்ள முடியாத அங்கலாய்ப்பு உள்ளது. ஏன்? இளைஞர்களின் மூளை தொடர்ச்சியாக வளர்ந்துவருகிறது. மூளையை எம்ஆர்ஐ ஸ்கேன் வழியாக ஆராய்ச்சி செய்யும் வரை மூளை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வளர்வதில்லை என பல ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆனால் மூளை இருபது வயதுக்கு பிறகும் வளர்ச்சியடைவதே உண்மை. குழந்தைகளின் மூளை –- இளைஞர்களின் மூளை என்ன வேறுபாடு? குழந்தைகளின் மூளையிலிருந்து இளைஞர்களின் மூளை உறுதியான பல்வேறு மாற்றங்களை(வடிவம், ஆற்றல் உட்பட) காண்கிறது. இவை ஒரே நாளில் மாற்றங்களைப் பெறுவதில்லை. என்ன மாற்றங்கள் என கூறுங்கள். வெள்ளை, கருப்பு என இருபகுதிகளால் மூளை உருவாகியுள்ளது என உதாரணமாக கொள்வோம். மூளையின் நியூரான்களை இணைப்பதற்கு சினாப்செஸ் என்று பெயர். வெள்ளை நிறப்பகுதியில் உள்ள பல்வேறு இழைகள் மூலம் பிறருடன் தொடர்புகொள்வதற்கான விஷயங்கள் நடக்கின்றன. டீன் ஏஜ் பருவத்தில் வெள்ளைநிறப்பகுதி அதிவேகமாக வளர்ச்சிபெறுகிறது.  அதேநேரம் கறு

ஆக்ரோஷ காளைச்சுறா!

படம்
ஆபத்தான சுறா! காளைச்சுறா(அல்லது நிகரகுவா சுறா), Carcharhinus leucas எனும் குடும்பத்தைச் சேர்ந்தது. மிதவெப்ப சூழலில் வாழ விரும்பும் காளைச்சுறா, உலக இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தால் அழியும் நிலையிலுள்ள விலங்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆண் சுறா 2.25 மி.மீ நீளமும், 95 கி.கி எடையும் கொண்டது. பெண் சுறாக்கள் ஆண் சுறாக்களை விட நீளமும் எடையும் அதிகம் கொண்டவை. நன்னீர், கடல்நீர் இரண்டிலும் உடலின் ஆக்சிஜனை கட்டுப்படுத்தி வாழும் திறன் கொண்ட காளைச்சுறா, கணிக்கமுடியாத ஆக்ரோஷ நடத்தை கொண்டவை. பகலிலும் இரவிலும் வேட்டையாடும் டேலன்ட் கொண்ட காளைச்சுறா, தன் இன சுறாக்கள், டால்பின்கள், சிறுமீன்களை ஆசையாக சாப்பிடும். பதினாறு ஆண்டுகள் வாழும் காளைச்சுறாவுக்கு வெள்ளைச்சுறா, புலிச்சுறா, முதலைகள் கடும் சவால் கொடுக்கின்றன. மனிதர்களை சுறாக்கள் தாக்கின என்று செய்தி வந்தால் கண்ணை மூடிக்கொண்டு காளைச்சுறா தாக்கியது என புரிந்துகொள்ளலாம். மனிதர்களை தாக்குவதில் காளைச்சுறா, வெள்ளைச்சுறா, புலிச்சுறா ஆகிய மூன்றும் முன்னணி வகிக்கின்றன. தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூகினியா ஆகிய நாடுகளில் பரவல

ஸ்மார்ட்போனில் பிஸினஸ்! - அத்.24

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம் 24! –  கா.சி.வின்சென்ட்     இணையம் உள்ளங்கையளவு ஸ்மார்ட்போனில் சுருங்கிவிட எதற்கு தயக்கம்? இந்த டெக்னாலஜியை நன்கு புரிந்துகொண்டதால்தான் தாரிகா ஃபேஸ்புக்கிலேயே தன் கேக்குகளை விற்பனை செய் து சாதிக்கிறார்.   ஸ்விட்சர்லாந்தில் வசித்தபோது எக்லெஸ் கேக்குகளை செய்து விற்றுவந்த தாரிகா , கணவரின் வேலைமாற்றம் காரணமாக பெங்களூருவுக்கு வந் தார். அப்போது வீட்டிலேயே கேக்குகளை தயாரித்து விற்கலாமே என முடிவு செய்தார் . ஃபேஸ்புக் உதவியது; தயாரித்த கேக்குகளின் புகைப்படத்தை ஷேர் செய்ய , ஆர்டர்கள் குவிந்தன.   ஃபேஸ்புக் இதற்கென மார்க்கெட் பிளேஸ் என்ற வசதியை வழங்குகிறது . ஆர்டர்களுக்கான தொகையை மொபைல் வாலட் மூலம் பெறமுடியும் . ஃபேஸ்புக் , வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்தி கேக் , சோப்பு , கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை வீட்டிலேயே செய்து பலரும் விற்று வருகின்றனர் . " நான் ஃபேஸ்புக்கில் 2012 ஆம் ஆண்டு என் பிஸினஸைத் தொடங்கினேன் . இன்று இ தன்வழியாக மட்டுமே 60% வாடிக்கையாளர்கள் எனக்கு உண்டு " என்கிறார் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பேஷன் டிசைனரான கீர்த்திச