ரூல்ஸ் விதித்தால் ஆர்செனிக் விஷம் பதிலடி!


கொலைகாரர்களின் பூமி!

Image result for worlds terrific psycho murderers



Nannie Doss

அமெரிக்காவின் அலபாமாவில் பிறந்த நானி தாஸ்(1905-1965), பதினொரு கொலைகள் செய்த குற்றவாளி. சிறுவயதில் தலையில் அடிபட்டு தலைவலி மன அழுத்தங்களால் தவித்தவர், பின்னாளில் தன்னிடம் கண்டிப்பு காட்டிய 4 கணவர்கள், குழந்தைகள் சகோதரிகள் என பாரபட்சம் காட்டாமல் ஆர்சனிக் விஷம் வைத்து கொன்றார். ஏன் மேடம் கொலை செஞ்சீங்க? என போலீஸ் கேட்டபோது சிரிப்பு மட்டுமே அவரிடம் வந்த பதில்.

Pedro Rodrigues Filho


18 வயதிற்குள் பத்துபேரை கொன்ற பிரேசிலைச் சேர்ந்த பெட்ரோ(1954-), 71-100 எண்ணிக்கையிலான கிரிமினல்களை மட்டும் போட்டுத்தள்ளிய கொஞ்சம் நல்ல கிரிமினல். கொலைகளுக்கிடையில் மரியா ஒலிம்பியா என்ற பெண்ணை காதலித்தார். போதை கேங்கினால் அவள் கொல்லப்பட பெட்ரோ அத்தனை பேரையும் கொன்றார். தற்போது பெட்ரோவுக்கு 128 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Richard Chase
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பிறந்த ரிச்சர்ட் சேஸ்(1950-80), ஆறு பேரைக் கொன்று ரத்தம் குடித்த டிராகுலா. கொல்பவர்களை கற்பழிப்பதும், உறுப்புகளை சாப்பிடுவதும், ரத்தத்தை குடிப்பதும் சேஸூக்கு பிடித்தமானவை.