சேவலோடு சேசிங்!


பிட்ஸ்!


Image result for robo shankar comedy



ஆக்ரோஷ ஆக்டோபஸ்!

அமெரிக்காவின் தெற்கு பிலடெல்பியாவில் உருவாக்கப்பட்டுள்ள கடல் விலங்கு சிற்பம் மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடல் விலங்கான ஆக்டோபஸ் கட்டிடத்தை துளைத்து வெளியேற முயலும் காட்சியை  அச்சு அசலாக காட்சிபடுத்திய சிற்பம் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது. இதனை உருவாக்கிய நேவி யார்டு மற்றும் க்ரூப் எக்ஸ் அமைப்புகளின் கலைமுயற்சிக்கு மக்களிடையே பாராட்டுகள் குவிந்துள்ளன.

சேவல் சேசிங்!

அமெரிக்காவின் இண்டியானாவில் சேவலுடன் போட்டி போட்டு ஓடிய போஸ் மார்பாச் என்ற இளைஞர் வீடியோ இணையத்தில் சிரிப்பலைகளை உருவாக்கியுள்ளது. “சேவல் உண்மையில் அவ்வளவு வேகமாக என்னை துரத்தும் என்பதை முதலில் நம்பவே முடியவில்லை” என ஆச்சரியப்பட்ட போஸ், சேவலை சேசிங் வேகம் இணையத்தில் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

அட்வென்ச்சர் குழந்தை!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிண்டி லிம், ட்ரிஸ்டன் தம்பதியினர், தம் ஐந்து மாத குழந்தையுடன்  அமெரிக்காவின் 50 மாநிலங்களை சுற்றிவந்து சாதனை படைத்துள்ளனர். ஜூன் மாதம் தொடங்கிய இப்பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.”சாலை வழியாக அமெரிக்க மாநிலங்களை சுற்றிவந்தது மறக்கமுடியாத அனுபவம்” எனும் லிம்- ட்ரிஸ்டன் தம்பதியினர் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர்.  

மீட்டிங்கில் பாம்பு!

சீனாவின் குவாங்ஸி பகுதியிலுள்ள நானிங் நகரிலுள்ள வங்கியில் அதிகாரிகளின் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென மேற்புற சுவரிலிருந்து மலைப்பாம்பு ஒன்று கீழே விழ, அதிகாரிகள் குழு உயிர்ப்பயத்தில் திசைக்கொருவராக ஜம்ப்பாகி உயிர்தப்பிய வீடியோ, இணையத்தில் அதிரடி ஹிட்டாகியுள்ளது. போலீஸ் மற்றும் வனத்துறையினர் அழைக்கப்பட்டு மலைப்பாம்பு மீட்கப்பட்டது.   




பிரபலமான இடுகைகள்