பீட்டில்: முடிவுக்கு வந்த 80 ஆண்டு கனவுக்கார்!
பீட்டில் –- 80 ஆண்டு கனவுகார்!
1930 ஆம் ஆண்டு நாஜி ஜெர்மனியில்
ஹிட்லர் மற்றும் – பொறியாளர் ஃபெர்டினான்டு போர்ச் ஆகியோர் இணைந்து உருவாக்கிய கார்,
போக்ஸ்வேகன் பீட்டில். வரும் ஆண்டு ஜூலை மாதத்துடன் பீட்டில் கார் தயாரிப்பு நிறுத்தப்படுவதாக
ஃபோக்ஸ்வேகனின் அமெரிக்க இயக்குநர் ஹின்ட்ரிச் வோப்கென் கூறியுள்ளார்.
நான்குபேர் உட்கார்ந்து செல்லும்
கார்களை பெருமளவில் தயாரிக்க ஹிட்லர் உத்தரவிட்டு உருவானதுதான் பீட்டில் கார். இரண்டாம்
உலகப்போரின் போது தொழிற்சாலையை காப்பாற்றியது இங்கிலாந்து ராணுவ மேஜர் இவான் ஹிர்ஸ்ட்.
1960 ஆண்டு அமெரிக்காவில் சக்கைப்போடு போட்ட வெளிநாட்டு கார் இதுவே. ஹிப்பிக்களின்
சாய்ஸாக பீட்டில் அமைந்ததற்கு என்ன காரணம் என புரியவில்லை.
1979 ஆம் ஆண்டு விற்பனை நிறுத்தப்பட்டு
1990 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெண்களுக்காக மீண்டும் விற்பனைக்கு வந்து வென்றது பீட்டில்.
மெல்ல பெரிய, ஸ்போர்ட்ஸ் வகை கார்களை மக்கள் நாடத்தொடங்க பீட்டில் கார்களின் விற்பனை
சரியத்தொடங்கியது. டீசல்புகை ஊழல், எலக்ட்ரிக் கார்களின் உருவாக்கம் என ஃபோக்ஸ்வேகன்
காலத்திற்கேற்ப நவீனமாகியுள்ளது.