வெளிநாடுகள் ஏற்கும் இந்திய ஓட்டுநர் உரிமம்


இந்திய லைசென்ஸை ஏற்கும் வெளிநாடுகள்- ரோனி



Image result for ind license plate


அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கார், பைக் ஓட்ட இனி தனி இன்டர்நேஷனல் லைசென்ஸ் தேவையில்லை. நாம் சாதாரணமாக போக்குவரத்து அலுவலகத்தில் பெற்றுள்ள வாகன உரிமமே போதுமானது.

அண்மையில் ஆஸ்திரேலியா, சுற்றுலாவாசிகளை ஈர்க்கும்விதமாக இந்திய வாகன உரிமம் கொண்டே கார்களை இயக்கலாம் என அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் இடதுபுறம் வாகனம் ஓட்டும் பழக்கம் உண்டு என்பதால் பிரச்னையில்லை. “சுயமாக கார் ஓட்டும் பழக்கம் அதிகம் கொண்ட இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் அதிகம். அமெரிக்காவில் உங்கள் லைசென்ஸூடன் I-94 எனும் அமெரிக்காவுக்கு நீங்கள் வந்த தேதியைக் குறிப்பிடும் பேப்பரை வைத்திருந்தால் போதும்” என்கிறார் சுற்றுலா மேலாளரான டெபோலின் சென்.இதேபோல ஸ்விட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் இந்திய அரசின் வாகன உரிமங்களை சிற்சில அடையாள அட்டை ஆதாரங்களுடன் ஏற்கின்றன.




பிரபலமான இடுகைகள்