தூங்காவிட்டால் என்னாகும்?
ஏன்?எதற்கு?எப்படி? – Mr.ரோனி
தூங்காதபோது நம் உடலில் என்ன விளைவுகள்
ஏற்படும்?
தூக்கம் என்பது எந்த வேலையும்
செய்யாமல் கண்களை மூடியிருப்பது என நினைக்காதீர்கள். தூங்கும் நேரம் மட்டுமே உடல் தனது
பிரச்னைகளை சரி செய்து தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறது. தூங்காமல் உள்ளவர்களுக்கு
இதயநோய், உடல்பருமன் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.
5 மணிநேரங்களுக்கு குறைவாக தூங்குபவர்களுக்கு
15 சதவிகித ஆயுள் குறையும். மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் அதிகரித்து ரத்த அழுத்தம்
ஜிவ்வென உயருவதால் கண்களின் கீழ் கருவளையம், பைபோலார் டிஸார்டர், குளூக்கோஸ் அளவு குறைவு(இரண்டாம்
நிலை நீரிழிவுநோய்), தீராத தசைவலி ஆகியவை தூக்க குறைவின் அறிகுறிகளாக உருவாகின்றன.