இந்தியாவை முன்னேற்றும் தொழில்முயற்சிகள்!

இனக்குழுவை முன்னேற்றும் தொழில்முனைவு முயற்சிகள்!


Image result for i was a sari



I Was A Sari

மும்பையில் வறுமைக்கோட்டிற்கும் கீழுள்ள பெண்களை முன்னேற்றுவதற்கான முயற்சியாக ஸ்டெஃபனோ ஃப்யூனரியால் தொடங்கப்பட்ட நிறுவனம்.

உடைகள், பேக்குகளை பழைய ஆடைகளிலிருந்து தயாரிக்கிறார்கள்.  அனிமெத் அறக்கட்டளை மூலம் பெண்களுக்கு பயிற்சியளித்து தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். தற்போது GUCCI எனும் பிராண்டின் உதவியை இந்நிறுவனம் பெற்றுள்ளதால் விரைவில் பெண்களுக்கு உயர்தரத்திலான  தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன.


Image result for Dehaati




Dehaati

குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த தொழில் நிறுவனம். நீரஜ் தவே - சிரிஷ்டி வர்மா என்ற இரு கலைஞர்களின் மூலம்  தொடங்கப்பட்ட நிறுவனம் களிமண் பொருட்களை தயாரிக்கிறது. ராம்சுபாய் கம்பர், அமத் கம்பர் உள்ளிட்ட உள்ளூர் கலைஞர்களை பணியில் இணைத்து பொருட்களை தயாரித்து வருகிறது. உள்ளூர் கலைஞர்களை கைகொடுத்து தூக்கிவிடும் இந்நிறுவனத்தின் பெயருக்கு கிராமத்தான் என்று பெயர்.
Image result for dwaraka paintings, andhra pradesh
Dwarka

ஆந்திராவில் கலம்கரி ஓவியங்களுக்கு புகழ்பெற்ற நிறுவனம்  த்வாரகா. பத்ம விருது வென்ற அனிதா ரெட்டி, கலம்கரி ஓவியங்களை பலருக்கும் கற்றுத்தந்து அதனை தொழில்துறையாக வளர்த்தெடுக்க முயற்சித்து வருகிறார்.