தூக்கத்தை கனவுகள் குறைக்கிறதா?
ஏன்?எதற்கு?எப்படி? – Mr.ரோனி
கனவுகள் தூக்கத்தை குறைப்பது உண்மையா?
பாம்பு உங்களை காட்டில் துரத்துவது,
ரத்தம் குடிக்கும் காட்டேரிகளிடம் தப்பி ஓடி பள்ளத்தில் வீழ்வது என கனவு கண்டு எழும்போது
அலறி எழும்போது குப்பென உடல் வியர்த்து தூக்கம் கலைந்துவிடும். பொதுவாக தூங்கி எழுந்து
வேண்டாவெறுப்பாக சோம்பல் முறிக்கும்போது பெரும்பாலான கனவுகள் 90 சதவிகிதம் மூளையின்
லாக்கர்களிலிருந்து கீழிறங்கிவிடும். அப்படி நினைவிருந்தால் அக்கனவுகள் உங்கள் தூக்கத்தை
தீவிரமாக பாதித்துள்ளது என புரிந்துகொள்ளலாம். அன்றைய நாளின் கோபம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி
நிகழ்வுகளை டைரியில் குறித்து வைப்பது கனவுகளின் எண்ணிக்கையை குறைக்க உதவக்கூடும்.