வின்சென்ட் வான்காவின் கடைசி வார்த்தை!


பிட்ஸ்!


Image result for 'La tristesse durera toujours'


கொரில்லா என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் முடிகளைக் கொண்ட பழங்குடிப்பெண் என்று அர்த்தம்.

பிரபல ஓவியர் வின்சென்ட் வான்காவின்(1853-1890 ) கடைசி வார்த்தை 'La tristesse durera toujours', வாழ்நாள் முழுவதும் துயரம் நீடிக்கும் என்பதே இதன் அர்த்தம்.

குழந்தைகள் கலைப்பொருட்களை செய்ய உதவும் play-doh என்பதை அமெரிக்காவின் ஓஹியோவிலுள்ள சின்சினாட்டி நகரைச் சேர்ந்த பிரையன் ஜோசப் மெக்விக்கர், பில் ரோடன்பாக் ஆகியோர் கண்டுபிடித்தனர்.

இடதுகை பழக்கம் கொண்டவர்களின் தினமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி, 1996 ஆம் ஆண்டிலிருந்து உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கான்டாக்ட் லென்ஸைக் கண்டுபிடித்தவர், ஜெர்மனியைச் சேர்ந்த அடால்ஃப் காஸ்டன் யூஜென் ஃபிக்(1852-1937). பாப்கார்ன் சாப்பிடும்போது அதன் பிசிறுகள் பற்களில் மாட்டிக்கொள்ள அந்த கணம் கான்டாக்ட் லென்ஸ் ஐடியா பிறந்ததாம்.