மாரத்தானில் கல்யாணம்!
பிட்ஸ்!
மாரத்தான் கல்யாணம்!
அமெரிக்காவின் மிச்சிகனிலுள்ள
டெட்ராய்டு நகரில் 42 கி.மீ மாரத்தான் போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. வொய்ட்னி பிளாக்
- –ஸ்டீவன் பிலிப்ஸ் என்ற காதல்ஜோடி இதில் பங்கேற்று பாதி மாரத்தானிலேயே ரிங் மாற்றி
திருமணம் செய்து ஆச்சரியம் அளித்துள்ளனர். ஸ்டீவனின் காதலி வொய்ட்னி பிளாக், அண்மையில்
விபத்தில் சிக்கி 20 ஆபரேஷன்கள் செய்யப்பட்டு உயிர் பிழைத்து மெல்ல நடக்கத் தொடங்கியுள்ளார்.
டிஸ்னி ஜோடி!
அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தைச்
சேர்ந்த ஹீதர்- கிளார்க் என்ஸ்மிங்கர் ஜோடி, புளோரிடா- கலிஃபோர்னியா மாநிலங்களிலுள்ள
6 டிஸ்னி பூங்காக்களை 24 மணிநேரத்தில் சுற்றி வந்து சாகச திரில்லை அனுபவித்துள்ளனர்.
கடந்தாண்டு ஹீதர்-கிளார்க் ஜோடி குடும்பத்துடன் டிஸ்னி பூங்கா செல்ல திட்டமிட்டிருந்தனர்.
அப்போது திடீரென கிளார்க் மனைவி ஹீதரின் தந்தை மரணிக்க, அன்று தடைபட்ட பயணத்தை நிறைவேற்றி
மனைவியை மகிழ்வித்துள்ளார் கிளார்க்.
மூக்கை காணோம்!
அமெரிக்காவின் ஓரேகானைச் சேர்ந்த குடும்பம், வீட்டின் முன் வைக்கப்பட்டு
மிஸ் ஆன 2 அடி உயரமுள்ள மூக்கு சிற்பத்தை ஊரெங்கும் போஸ்டர் ஓட்டி தேடி வருகிறது.
23 கி.கி எடையுள்ள மூக்கு சிற்பத்தைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.462 பணப்பரிசு.
“சன்மானம் ரூ.1.47,450 அளிக்கத்தான் பிளான். ஆனால் அம்மா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை”
என்கிறார் குடும்ப உறுப்பினரான சாயர்.
மூக்குக்கு மஃப்ளர்!
இங்கிலாந்தில் கழுத்துக்கு மஃப்ளர் இருப்பதுபோல பனியில் மூக்கு
சிவக்காமல் கண்ணிய அழகில் பிறருக்கு தெரிய மூக்கு மஃப்ளர் வைரலாகியுள்ளது. நோஸ்வார்மர்
என்ற பெயரில் சந்தையில் பரபர விற்பனையிலுள்ள ஐடியாவின் பிரம்மா சாலி ஸ்டீல் ஜோன்ஸ்.
2009 ஆம் ஆண்டிலேயே சாலியின் மூளையைக் குடைந்த கிரியேட்டிவ் ஐடியாவின் சந்தை விலை ரூ.737.