அறிவியல்துறைகளில் தடுமாறும் பெண்கள் - காரணம் என்ன?


அறிவியல் உலகில் தடுமாறும் பெண்கள்!


Related image

அண்மையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற வாட்டர்லூ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டோனா ஸ்ட்ரிக்லேண்ட்டுக்கு பின்னர்தான் விக்கிபீடியா பக்கமே உருவாக்கப்பட்டது. இயற்பியல் நோபல் வெல்லும் மூன்றாவது பெண் ஆராய்ச்சியாளர் டோனா. 1985 ஆம் ஆண்டு டோனா செய்த ஆராய்ச்சியை கௌரவித்து விருதளிக்கப்பட்டுள்ளது.

லேசர் கதிர்களின் தன்மையை அதிகரிக்கும் ஆராய்ச்சிக்காக ஸ்ட்ரிக்லேண்ட் மற்றும் ஜெரார்ட் மௌரூ ஆகியோருக்கு ஒரு மில்லியன் டாலர்கள் இயற்பியல் பரிசுடன் அளிக்கப்பட்டது. இவர்களின் கண்பிடிப்பு துளையிடுவது, வெட்டுவது, அறுவை சிகிச்சை, உற்பத்திதுறை என பலவற்றுக்கும் பயன்படவிருக்கிறது.
மௌரூவிற்கு 2005 ஆம் ஆண்டே விக்கிபீடியா பக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் டோனாவுக்கு இதிலும் புறக்கணிப்புதான். 

வேரா ரூபின், நெட்டி ஸ்டீவன்ஸ், ஹென்றிட்டா லெவிட், ரோசாலின்ட் ஃபிரான்க்ளின் ஆகிய சில பெண்கள் மட்டுமே அறிவியல் துறையில் முன்னர் புகழடைந்தவர்கள். இவ்வாண்டின் ஜனவரியில் வெளியான Pew ஆராய்ச்சியில் ஸ்டெம் எனும் அறிவியல்துறைகளில் பணியாற்றும் பெண்களில் 50 சதவிகிதப்பேர் பணிகளில் பாலின தீண்டாமையையும், 36 சதவிகிதப்பேர் அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாலின கொடுமைகளை சந்தித்திருப்பதும் அறிக்கையில் வெளியானது.