பன்னாட்டு நிறுவனங்களின் சூழல் படுகொலை!
மாசுபாட்டில் நெ.1!
உலகளவில் இயற்கைச்சூழலை மாசுபடுத்தும்
நிறுவனங்களின் பட்டியலை க்ரீன்பீஸ் அமைப்பு மற்றும் Break Free From Plastic(2016) எனும் இரு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் 42 நாடுகளில்
239 கழிவுகளை அகற்றும் திட்டங்களின் கீழ் 1,87,000 பிளாஸ்டிக் கழிவுகளை ஆராய்ந்து இவ்வமைப்பினர்
பட்டியலை உருவாக்கியுள்ளனர்.
குளிர்பான நிறுவனமான கொககோலா முதலிடத்தையும் குளிர்பானம்,
சிப்ஸ், ஃபாஸ்ட்புட் உணவகங்களை நடத்தும் பெப்சி இரண்டாவது இடத்தையும், உணவுப்பொருட்களை
தயாரித்து வரும் நெஸ்லே மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
“பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து
பன்னாட்டு நிறுவனங்களை வரிசைப்படுத்துவதன் காரணம், அவை இயற்கை வளங்களை அழித்து பிளாஸ்டிக்
மாசுபாட்டை வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கத்தான். இனிமேலும்
குப்பைகளை உருவாக்குவதாக மக்களை குற்றவுணர்வுக்கு உள்ளாக்க முடியாது. பிளாஸ்டிக் பொருட்கள்
அதிகரிப்பதில் நுகர்பொருள் நிறுவனங்களுக்கும் பங்குண்டு” என்கிறார் பிரேக் ப்ரீ ஃப்ரம்
பிளாஸ்டிக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வான் ஹெர்னான்டெஸ்.