செக்ஸ் தவறுகளுக்கு தண்டனை இதுதான்!


செக்ஸ் தவறுக்கு சிறை உறுதி! 

Image result for sexual Behaviour at office

மேலைநாடுகள் மட்டுமல்ல இந்தியாவிலும் சினிமா, பத்திரிகை வட்டாரங்களை #மீ டூ குற்றச்சாட்டுகள் உலுக்கி வருகின்றன. பெண்கள் மீதான அத்துமீறல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு சிறைதண்டனை உண்டு என்பதால் ஜொள்ளு விடும் ஆண்களே கவனம்!

1997 ஆம் ஆண்டு விசாகா விதிகளின் படி பணியிடங்களுக்கான பாலியல் அத்துமீறல்களை உச்சநீதிமன்றம் வரையறுத்தது. டிசம்பர் 2013 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களை தடுப்பது, தண்டிப்பது, இழப்பீடு ஆகியவற்றுக்கான விதிமுறைகள்(கூடுதலாக பிரிவு 354) வகுக்கப்பட்டு சட்டம் வெளியானது.
பெண்களை கை, கால்களால் தொடுவது, ஆபாச படங்களை காண்பிப்பது, வலுக்கட்டாயமான பாலுறவுக்கு நிர்பந்தம், இவை சொற்களால் பாலுறவுக்கு கட்டாயப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றங்கள்தான். பாலியல்புகார் எழும்போது பத்து பேர் கொண்ட ஊழியர்களின் குழு, அமைக்கப்பட்டு இதனை விசாரிக்கலாம். இதில் 4 பேர் கட்டாயம் பெண் உறுப்பினர்களாக இருப்பது அவசியம்.

பெண்களை பாலியல்ரீதியில் தீண்டுவதற்கு குற்றவியல் சட்டம் 2013 படி, 1-5 ஆண்டுகளும், பெண்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து விநியோகிப்பதற்கு சட்டம் 2000 படி, 7 ஆண்டுகளும், பாலியல்ரீதியாக பேசி தொந்தரவு செய்வதற்கு 2013 சட்டப்படி 7 ஆண்டுகளும், வலுக்கட்டாய பாலுறவுக்கு மேற்கூறிய சட்டப்படி 10 ஆண்டுகளும் சிறைதண்டனை உண்டு.