மனித உரிமைக்கவுன்சிலில் இந்தியா!
மனித உரிமை கவுன்சிலில் இந்தியா
! –
மனித உரிமை கவுன்சில் தேர்தலில்
இந்தியா 188 வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது. மூன்று ஆண்டுகள் செயல்படும் ஐ.நாவின்
மனித உரிமை அமைப்பில், ஆசியா-பசிபிக் பிரிவில் இந்தியா பெருமளவு வாக்குகளைப் வென்றுள்ளது.
193 நாடுகளைக் கொண்ட ஐ.நா மனித
உரிமைக் கவுன்சிலில் புதிதாக ஒரு நாடு தேர்வு பெற குறைந்தபட்சம் 97 வாக்குகளைப் பெறவேண்டும்.
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இடத்திற்கு இந்தியா, பஹ்ரைன், ஃபிஜி, பிலிப்பைன்ஸ், வங்கதேசம்
ஆகிய நாடுகள் போட்டியிட்டன. இந்தியா இதற்கு முன்பு ஜெனீவாவில் செயல்படும் மனித உரிமைக்கழகத்தின்
உறுப்பினராக செயல்பட்டது.
தற்போதைய உறுப்பினர் பதவி அடுத்த
ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வரும். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 47 உறுப்பினர்
இடங்கள் உண்டு. ஆப்பிரிக்காவுக்கு 13 இடங்கள், ஆசியா- பசிபிக்குக்கு 13 இடங்கள், கிழக்கு
ஐரோப்பா- 6, மேற்கு ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு 7 இடங்கள், லத்தீன் அமெரிக்கா,
கரீபியன் நாடுகளுக்கு 8 இடங்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.