மனித உரிமைகள் பேசும் ஹாலிவுட் நாயகி!
அமண்ட்லா ஸ்டென்பெர்க்
''எனக்கு எது பொருத்தமான துறை என இன்னும் முடிவு செய்யவில்லை. இதுதான் என எதிலும் அடைத்துக்கொள்ள விரும்பவில்லை '' என உற்சாகமாக சொல்கிறார் அமண்ட்லா.
ஹங்கர் கேம்ஸ், எவ்ரிதிங் எவ்ரிதிங், தி டார்க்கெஸ்ட் மைண்ட்ஸ் படத்தில் நடித்தவர் என்பதைத் தாண்டி சமூக செயல்பாட்டாளர், தன் தலைமுறையின் விமர்சனக்குரல் என்பதாக நீளும் இவரின் ஆளுமை யாரையும் ஆச்சரியப்படுத்தக்கூடியது.
எனது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அரசியல்மயப்படுத்தப்படும் ஆபத்து இருப்பதால் கவனமாகவே செயல்பட்டு வருகிறேன் என பரிபக்குவமாக பேசுபவருக்கு வயது இருபது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சோஷியல் தளங்களை கெடுக்கும் பல்வேறு நிறுவனங்களைப் பற்றிய பதிவுகளும் தன்னைத்தானே கிண்டல் செய்து போடும் வீடியோக்களும் அமண்ட்லா பிராண்ட் ஸ்பெஷல். கடந்தாண்டு ஆஞ்சி தாமஸின் நாவலைத் தழுவி உருவான தி ஹேட் யூ கிவ் எனும் படத்தில் நடித்தார். போலீஸ் ஆயுதம் ஏதுமற்ற கருப்பின இளைஞரை கொன்றதை எதிர்த்து நீதி கேட்கும் செயல்பாட்டாளராக நடித்திருந்தார்.
பணம் சம்பாதிப்பது தாண்டி தான் எப்படி செயல்படவேண்டுமென்ற நிதானமும் இவருக்கு இருபதுகளில் உள்ளது என்பதுதான் இவரைப்பற்றி நாம் எழுதக்காரணம்.
நன்றி: டைம் வார இதழ்