காந்தி 150! - வாழ்க்கைப்பாதை

காந்தி 150!


Image result for gandhi illustration






காந்தி காலக்கோடு

1883

கஸ்தூரிபாயை மணக்கிறார்.

1888

நான்கு மகன்கள் பிறக்கின்றனர்.


1891

படிப்பு முடிந்து இந்தியாவுக்கு திரும்பியவர், பாம்பே மற்றும் ராஜ்கோட்டில் வழக்குரைஞராக பணியாற்ற தொடங்குகிறார்.

1893  ஏப்ரல்

தென்ஆப்பிரிக்காவில் இந்திய நிறுவனத்திற்காக வாதிட சென்றார். நிறரீதியிலான வேற்றுமையை தானே அனுபவிக்க நேரிடுகிறது.


1894 மே

நேடல் காங்கிரஸ் அமைப்பை அங்கு தொடங்குகிறார்.


1896 டிசம்பர்


தென்னாப்பிரிக்காவுக்கு குடும்பத்துடன் செல்கிறார் காந்தி. இந்தியாவிலிருந்தபோது தென்னாப்பிரிக்கா குறித்து பத்திரிகையில் எழுதியதால் வெகுண்ட வெள்ளையர்கள் அவரை தாக்கி காயப்படுத்துகின்றனர்.

1901-1902

இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டம் நடந்த கல்கத்தாவில் பங்கேற்கிறார். பாம்பேயில் வழக்குரைஞர் பணிக்காக அலுவலகம் திறக்கிறார்.


1904

ரஸ்கினின் கடையனுக்கும் கடைத்தேற்றம் நூலைப் படித்து டர்பனில் மக்களுக்காக போராடுகிறார்.

1914 ஜனவரி

மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டி உண்ணாவிரதம் கடைபிடிக்கிறார் காந்தி. பதினான்கு நாட்கள் இப்போராட்டம் நீள்கிறது. சத்யாகிரகப்போராட்டத்தை கைவிடுகிறார்.

ஜூலையில் தென்னாப்பிரிக்காவை விட்டு லண்டன் செல்கிறார். முதல் உலகப்போர் தொடங்குவதற்கான அறிகுறிகளை அடையாளம் காண்கிறார் காந்தி.


1917

சம்பரானிலுள்ள அவுரி தோட்ட ஊழியர்களுக்காக சத்யாகிரக வழிமுறையில் போராட முயற்சித்தார் காந்தி.  அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்  மில் தொழிலாளர்களுக்காக முதல்முறையாக உண்ணாவிரதம் எனும் ஆயுதத்தை கையில் எடுத்து வெற்றி காண்கிறார் காந்தி. இந்தியாவில் காந்தியின் முதல் உண்ணாவிரதம் அஹமதாபாத் மில் தொழிற்சாலை ஊழியர்களுக்காக நடைபெற்றது. 1918 மார்ச்சில் கேடா பகுதி விவசாயிகளுக்காக சத்யாகிரக போராட்டம் நடத்தினார்.


1919 ஏப்ரல்

ரௌலட் அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தார் காந்தி.


1920 ஆகஸ்ட்

இரண்டாம் முறையாக சத்யகிரகா போராட்டத்தை அகில இந்தியளவில் தொடங்கி, கெய்சர் இ இந்து மெடலை அரசுக்கு திருப்பியளித்தார் 


1922 பிப்ரவரி

ஒத்துழையாமை இயக்கம் சௌரிசௌராவில் பெரும் வன்முறை நிகழ்வாக முடிய, பர்டோலியில் 5 நாட்கள் உண்ணாநோன்பை தொடங்கினார் காந்தி.

1930 12 மார்ச்

79  தன்னார்வலர்களோடு சபர்மதி ஆசிரமத்தை தொடங்குகிறார். தண்டியில் உப்பு எடுக்கும் யாத்திரையை  முன்னெடுத்தார். 


அடுத்த ஆண்டு மார்ச்சில் காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதனையொட்டி சட்டமறுப்பு இயக்கம் தொடங்கி பிரபலமாகிறது. 

1932 ஜனவரி

பாம்பேயில் சர்தார் படேலுடன் காந்தி கைதாகி எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார் 

1933 மே 8

தீண்டாமைக்கெதிராக 21 நாட்கள் உண்ணாநோன்பை தொடங்குகிறார். சிறையிலிருந்து அரசு விடுதலை செய்ய பூனாவில் நோன்பை தொடர்ந்தார். 

1937 ஜனவரி

கேரளாவின் திருவனந்தபுரத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார். 

1942 ஆகஸ்ட்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் தொடங்க, சத்யாகிரக போராட்டங்கள் நாடெங்கும் தொடங்கின. காந்தி இவ்வியக்கத்தை முன்னெடுத்து தலைவரானார்.

1943 பிப்ரவரி 10

21 நாட்கள் உண்ணாநோன்பை ஆகாகான் மாளிகையில் தொடங்கி வைஸ்ராய் மற்றும் இந்திய தலைவர்களோடு முரண்பட்டு அதனை கைவிட்டார்.

1944 பிப்ரவரி 22

கஸ்தூரிபாய் தன் 74 வயதில் காலமானார். 

1947 மே

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் காந்தி.

1948 ஜனவரி 30

பிர்லா மாளிகையில் இந்து மகாசபையைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சேவினால் 79 வயது காந்தி படுகொலை செய்யப்படுகிறார்.

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்















பிரபலமான இடுகைகள்