ஐபோனில் மக்கள் பணம் உள்ளது!
ஐபோன் வளர்ச்சி!
ஐபோனில் தொடுதிரை, இணையம் இல்லாதபோது
அதனை எப்படி ஸ்மார்ட்போன் என்று கூறுவீர்கள் என்று கூறும் பொருளாதார ஆலோசகர் மெரினா
மசூகாடோ, புதிய கண்டுபிடிப்புகளில் பயன்படும் அரசு பணத்தை யாரும் எழுதுவதில்லை என்கிறார்.
புதிய கண்டுபிடிப்பில் சமூகத்தின்
பங்களிப்பும் உண்டு என்பதே மெரினாவின் வாதம். யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் நிறுவனரும்
இயக்குநருமான மெரினாவின் சமூக தொகுப்பிலான கண்டுபிடிப்பு, நிதி ஒதுக்கீடு பல்வேறு மட்ட
பொருளாதார நிபுணர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. “ அடிப்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக
அரசு ஒதுக்கும் நிதி முதலீடுகள், மக்களின் வரிப்பணத்திலிருந்து பிறந்தவை” என்கிறார்
ஆடம் ஸ்மித் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாம் டுமிட்ரியு.
The Value of Everything எனும் நூலில் கண்டுபிடிப்பின் மதிப்பு,
அதிலிருந்து நிறுவனங்கள், தனிநபர் ஈட்டும் லாபம் ஆகியவற்றை பற்றி பேசியுள்ளார். பொருளின்
மதிப்பை விற்றும் வாங்கியும் மறைமுகமாக நடைபெறும் வணிகம் எப்படி ஆபத்தான முதலாளித்துவ
கருவியாக மாறுகிறது என்பதை எழுதியுள்ளார். சிலிகன்வேலி எப்படி வால்ஸ்ட்ரீட் மற்றும்
லண்டன் உள்ளிட்ட சந்தைகளை மூடி மறைத்து மேலெழுவதை கடுமையாக விமர்சிக்கிறார்.