குஜராத்தில் விரட்டப்படும் பீகார் தொழிலாளர்கள்!


உள்நாட்டு அகதிகள்!


Related image



குஜராத்தில் பணிபுரிந்து வந்த பீகார் தொழிலாளி , பதினான்கு மாத குழந்தையை வல்லுறவு செய்து போலீசில் பிடிபட்டார். உடனே அம்மாநிலமெங்கும் வசிக்கும் பீகார், உ.பி உள்ளிட்ட பிறமாநில தொழிலாளர் மீது தீவிர தாக்குதல் தொடங்கியது.
பிரிவினை சக்திகளின் வன்முறையை காவல்துறையும் மறைமுகமாக ஆதரிக்கும் விதமாக, பிற மாநில தொழிலாளர்களை வெளியேற வற்புறுத்தி வருகின்றனர். குஜராத்தின் பலபுறங்களிலும் அதிகரிக்கும் வன்முறை நிகழ்வுகளால் மேசனா, காந்திநகர், சபர்கந்தா, ஆரவள்ளி மாவட்டங்களில் பணிபுரிந்துவரும் 1,500 க்கும் மேற்பட்ட பீகார், உ.பி மாநில தொழிலாளர்கள் சம்பள பாக்கியைக்கூட வாங்காமல் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.”தாக்கூர் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்கள் தொழிற்சாலை பகுதியிலுள்ள தொழிலாளர்களை அடித்து விரட்டினர். என்னுடைய மொழி, மாநிலத்தை மிரட்டி கேட்டவர்கள் விரைவில் அங்கிருந்து வெளியேற அச்சுறுத்தினர்” என்கிறார் முகமது கரீம். பிறமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியை குறிவைத்து கல்லெறிவது, கத்திக்குத்து, கொலைமிரட்டல் ஆகியவற்றை செய்யும் சமூகவிரோத இயக்கங்களின் செயல்பாடுகள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.



பிரபலமான இடுகைகள்