சகோதரியை தண்டித்த போலீஸ்காரர்!
சகோதரிக்கு சமநீதி!
மிசோரம் மாநிலத்தின் காவல்துறை
சூப்பரிடென்ட்டான ராம்தெலங்கிலியானா, கடமையாற்றுவதில் சிங்கம் சூர்யாவைவிட கறாரானவர்.
பின்னே தன் சொந்த சகோதரி மீது அபராதம் விதித்துள்ளார் என்றால் சும்மாவா?
சட்டம் செல்வாக்கு பணம் உள்ளவர்களுக்கு
ஏற்ப நெகிழ்ந்துகொடுக்கும் என்பதை ஏற்காமல் செயல்பட்ட ராம்தெலங்கியானா, போக்குவரத்து
விதிமீறலை செய்த தங்கைக்கு அபராதம் விதித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். “அஸவில் நகரைப்
பொறுத்தவரை கார் உரிமையாளர் காரை வீட்டின் காரேஜில்தான் நிறுத்தவேண்டும். வீட்டின்
வெளிப்புறச்சாலையில் நிறுத்தினால் அதற்கு நிச்சயம் அபராதம் உண்டு. என் தங்கை அவளது
வீட்டின் முன்புறச்சாலையில் நிறுத்தியிருந்ததை போலீசார் கூற, தயங்காமல் அபராதம் விதித்தோம்”
என புன்சிரிப்புடன் கூறுகிறார் ராம்தெலங்கியானா. இருமாதங்களுக்கு முன்னர் நடந்த இந்நிகழ்வு
தற்போது இணையமெங்கும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.