கற்பனைத்திறன் கட்டுப்பாடுகளை உடைக்க உதவியது!
முத்தாரம் Mini
உங்களை பிறர் குறைத்து மதிப்பிடும்போது
என்ன நினைப்பீர்கள்?
அமெரிக்காவின் சென்ட்ரல் ஃபால்ஸ்
பகுதி தொடங்கி என்னைக் குறித்த அரைகுறை மதிப்பீடுகளை கண்டு வருகிறேன். நாடகத்துறையில்
ஈடுபாட்டுடன் செயல்படுவது, எனக்குள்ள எல்லை என பிறர் என்மீது திணித்த கருத்துக்களை
நான் கடந்து செல்ல உதவியது.
ஹாலிவுட்டில் நிறைய இனவேறுபாடுகள்
உள்ளன. அது பற்றி..
மற்றவர்கள் உங்களை பெட்டிக்குள்
அடைக்கும் வரை மௌனமாக இருக்காமல் பேசவேண்டும் என்று என் கணவர் கூறுவார். இன்று கருப்பினத்தவர்கள்
சினிமா தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். வரலாற்றின் முக்கியமான இடத்தில் நம் மனதிலுள்ள
சக்தியை ஒவ்வொருவரும் உணரும் இடம் இது.
நடிப்பு என்ற எல்லையைக் கடந்து
குழந்தைகள் நூலான Corduroy Takes a
Bow வை எழுதியிருக்கிறீர்கள். எப்படி?
கதையில் வரும் துருதுரு கரடியின்
இயல்பிலிருந்த நானும் சிறுவயதில் அதேபோல் தண்டிக்கப்பட்டுள்ளேன். இரவு கதை சொல்லும்போது
என்னையும் அக்கதையில் சேர்க்கமுடியுமா? என என் மகள் கேட்டதற்காகவே நான் குழந்தைகள்
நூலை எழுதினேன்.
-வயோலா டேவிஸ், ஆங்கில திரைப்பட
நடிகை