பழங்குடிகள் பட்டினியால் சாகிறார்கள்!
பட்டினி போராட்டம்!- ரோனி
உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியில்
வாழும் பழங்குடிகள் பட்டினியைத் தவிர்க்க எலிகளையும் நத்தைகளையும் சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வருகின்றனர்.
இந்திய அரசு ஊட்டச்சத்துக்குறைவுக்கு
எதிரான தினத்தை கொண்டாடிய அதேநேரத்தில் ராப்கா துல்கா கிராமத்தில் சோன்வா தேவியின்
இரு மகன்களும் பசியால் துடிதுடித்து இறந்துபோனார்கள். இங்குள்ள மகாதலித் இனக்குழு,
உணவுக்கு எலி மற்றும் நத்தைகளை சார்ந்தே உள்ளனர். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பெயர்களை
இணைத்தாலும் கைப்பிடி அரிசி இவர்களுக்கு கிடைப்பதாயில்லை.
பசியில் இறந்த குடும்ப உறுப்பினர்களால்
அக்குடும்பத்தினருக்கு மட்டும் அரசு மூலம் சிறிது தானியம் கிடைத்துள்ளது அவல முரண்.
“இறந்த சகோதரர்களின் இறப்புக்கு பட்டினி காரணமல்ல; காசநோய்தான் காரணம். எங்கள் அரசு
முசாகர் இனக்குழுவிற்கு ரேஷன், வீடுகள், வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது” முதல்வர் யோகி
ஆதித்யநாத் சமாளித்தாலும் பட்டினி சாவுகள் அப்பகுதியில் அதிகரித்து வருவது உண்மை. கழிவறை
கட்டினால்தான் ரேஷனில் அரிசி, கோதுமை தருவோம் என தினக்கூலி ஏழை மக்களை ஈவு இரக்கமற்று
அதிகாரிகள் மிரட்டி ஏய்ப்பது தனிக்கதை.