பூனைகளை பாதுகாக்கும் இஸ்ரேல் சகோதரிகள்!
பூனைச் சகோதரிகள்!
இஸ்ரேலின் தாக்குதல்களால் சிதைந்த
காசா எல்லைப்புற பகுதியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 35 பூனைகளை மரியம், ரயிஷா, எல்ஹம்
அல்பர் ஆகிய மூன்று சகோதரிகள் பாதுகாத்துள்ளனர்.
மூன்று சகோதரிகளும் அல்ஷாதி அகதிகள்
முகாமில் சுற்றித்திரிந்த 35 க்கும் மேற்பட்ட பூனைகளை காப்பகம் அமைத்து உணவு, சிகிச்சை
கொடுத்து பராமரித்து வருகின்றனர். “பூனைகள் எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே
மாறிவிட்டன. பூனைகளை பராமரிப்பதில் எங்களுடைய குடும்பமும் ஆதரவளித்து உதவுகிறது” என்கிறார்
மூன்று சகோதரிகளில் இளையவரான மரியம். காசாவிலுள்ள இஸ்லாமிய பல்கலைக்கழக பட்டதாரியான
மரியம், ஆசிரியர் வேலைக்கான தேடுதலில் இருந்தார். சாலையில் சென்றுகொண்டிருந்தபோது,
சாலையைக் கடந்த பூனை காரில் அடிபட்டு குற்றுயிராக விழுந்ததைப் பார்த்து காப்பாற்றினார்.
அன்றிலிருந்து அப்பகுதியில் காயம்பட்ட ஆதரவற்ற பூனைகளை பாதுகாக்க தொடங்கினார் மரியம்.
இவரின் ஆர்வத்தை மூத்த சகோதரிகளான ரயிஷா, எல்ஹம் அல்பர் ஆகியோரும் அவர்களின் பிள்ளைகளும்
பின்பற்ற பூனைகளின் காப்பகம் மெல்ல உயிர்பெற்றிருக்கிறது. தற்போது பராமரித்து வரும்
பூனைகளை ஆர்வமுள்ளவர்களுக்கு தத்து கொடுத்தும் வருகின்றனர்.