தனியொரு நீதிபதி! - மனசாட்சியின் குரல்
தெலுங்கு தேசமாகும் அமெரிக்கா!
அமெரிக்காவின் மக்கள்தொகையில்
பாதிக்கும் மேல் பிறமொழி மக்கள்தான். அண்மையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் பேசும்
மொழியை கண்டறிய குடியேற்ற மையம் செய்த ஆய்வில் பெங்காலியுடன் தெலுங்கு மொழி(57%-2000-17)
முன்னிலை வகிக்கிறது. தமிழின் விகிதம் 55%.
பெங்காலி மொழியுடன் சரிக்குசமமாக
போட்டியிடும் தெலுங்குமொழி ஆந்திரா, தெலுங்கானாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து அறிவியல்துறைகளில்
பணியாற்றுபவர்களால் முன்னணி இடத்தை வகிக்கிறது. 2000-17 வரையிலான காலகட்டத்தில்
2,22,977- 4,15,414 என தெலுங்கு குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதோடு இந்தி(8 லட்சத்திற்கும்
அதிகம்), பெங்காலி, தமிழ் ஆகிய மொழிகளும் பெரும்பான்மை மக்களால் பேசப்பட்டு வருகிறது.
அமெரிக்க மக்கள்தொகையில் ஆங்கிலம் அல்லாத மொழிகளை பேசுபவர்களின் அளவு 21.8%. வடக்கு
டகோடா, உடா, டி.சி, வியோமிங் ஆகிய வட்டாரங்கள் பிறமொழி மக்களின் கோட்டையாக திகழுகின்றன.
2
நகரை சுத்தமாக்கிய ஐஏஎஸ் அதிகாரி
சத்தீஸ்கரின் சர்குஜா மாவட்டத்தைச்
சேர்ந்த அம்பிகாபூர் நகரெங்கும் துளி குப்பையின்றி பளிச்சென சுத்தம் பளீரிடுகிறது.
காரணம், ஐஏஎஸ் அதிகாரியான ரிது சைன். “திறந்தவெளி குப்பைக்கிடங்குகளை ஒழிப்பதே என்
முதல் லட்சியமாக நினைத்தேன். மக்களின் ஆதரவுடன் இன்று அதனை சாதித்துள்ளோம்” என நம்பிக்கையுடன்
பேசுகிறார் ரிது.
டெல்லியின் ஜேஎன்யூ பட்டதாரியான
ரிது, ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் வசிக்கும்
அம்பிகாபூரில் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பல்வேறு முறைகளை சோதித்தார். சுய உதவிக்குழுக்களின்
மூலம் குழுக்களை அமைத்து குப்பைகளை வீட்டிலேயே பெற்று அதனை இயற்கை, வேதிப்பொருட்கள்
என இருவகையாக பிரித்தார்.
நகரிலுள்ள 48 வார்டுகளில் 447
பெண்கள் மூலம் குப்பைகளை பெற்று 48 குப்பைக்கிடங்குகளில் அதனை தரம்பிரிக்கும் திட்டத்தை
செயல்படுத்தினார் ரிது. இதன் விளைவாக 16 ஏக்கர் திறந்தவெளி குப்பைக்கிடங்குகளின ்எண்ணிக்கை
ஐந்தாக குறைந்தது. “இத்திட்டத்திற்கு அரசு முதலீடு 6 கோடி. அதில் மறுசுழற்சிக்கு பொருட்களை
விற்றதில் 2 கோடி கிடைத்திருக்கிறது.” என பெருமையோடு பூரிக்கிறார் ரிது. 2018 ஆம் ஆண்டிற்காக
தூய நகரங்கள் பட்டியலில் அம்பிகாபூர் இடம்பெற்றுள்ளது.
3
தனியொரு
நீதிபதி!
அரசு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் என உச்சநீதிமன்றம்
தீர்ப்பு வழங்கினாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆதார் எதிரானது என தன் வாதத்தில்
இறுதிவரை உறுதியாக நின்ற ஐந்து நீதிபதிகளில் ஒருவரான தனஞ்செயா யஷ்வந்த் சந்திரசூட்
நாடெங்கும் பிரபலமாகியுள்ளார்.
“தொழில்நுட்பத்திற்காக அரசியலமைப்பு உரிமைகளை
நம்பிக்கைகளை சமரசம் செய்யக்கூடாது” என ஆதார் கார்டுக்கு எதிராக வாதிட்டார்
தனஞ்செயா. 2016 ஆம் ஆண்டு நிதி மசோதா என்று கூறி ஆதாரை செயல்பாட்டுக்கு கொண்டு வர
மத்திய அரசு முயன்றதை பித்தலாட்டம் என்று கூறிய தில் விமர்சனக்காரர். மக்கள்
கண்காணிப்படுவதையும், தகவல்கள் வணிக நோக்கத்தில் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான ஓட்டைகள்
ஆதாரில் உண்டு என்பதை உணர்ந்தே நீதிபதி தனஞ்செயா சட்டம் 110 இன் கீழ் இது
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி ஆதாரை கட்டாயமாக்க மறுத்தார்.
பிரிவு 57 இன் படி தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்களை
பெறலாம் என்பது குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்போம் என அரசியலமைப்பு சட்டம்
கூறியுள்ளதற்கு எதிரானது என கூறிய தனஞ்செயா, முன்னர் அலகாபாத் உயர்நீதிமன்ற
நீதிபதியாக(2013-16) பணியாற்றியவர்.
4
கல்வியில் உயர்வு!
அண்மையில் வெளியான டைம்ஸ் உயர்கல்வி
பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 49 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. ஐஐடி இந்தூர்
இந்திய கல்வி நிறுவனங்களில் முன்னணி வகிக்கிறது. உலகளவில் டாப் 200 பல்கலைக்கழக பட்டியலில்
இந்திய பல்கலைக்கழகங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது கவலையளிக்கும் செய்தி.
இப்பட்டியலில் முதலிடத்தில் ஆக்ஸ்ஃபோர்டு
பல்கலைக்கழகமும், இரண்டாமிடத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமும், ஸ்டான்ஃபோர்டு மூன்றாமிடமும்
பிடித்துள்ளன.
இப்பட்டியலிலுள்ள இந்தியாவின்
ஐந்து உயர்கல்வி நிறுவனங்களில் ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரீஸ்வரா பல்கலைக்கழகமும் இடம்பிடித்தது
கல்வியாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. பட்டியலில் ஐஐடி இந்தூர் முன்னேறியுள்ளது
மகிழ்ச்சி என்றால் ஐஐடி பாம்பே முந்தைய ஆண்டை விட பின்னடைவைச் சந்தித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு வெளியான பல்கலைக்கழக பட்டியலில் 42 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றன.
2019 ஆம் ஆண்டு பட்டியலில் அதன் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.