சிவாஜி மட்டுமே மன்னர் அல்ல!

மினி பேட்டி

Related image





"சிவாஜியைக் கடந்தும் மன்னர்கள் இந்தியாவில் உண்டு"

 எழுத்தாளர் மனு எஸ் பிள்ளை




Image result for manu s pillai




டெக்கன் பகுதிகளை எழுதும்போது மன்னர் சிவாஜியை தவிர்க்கமுடியாது இல்லையா?

வரலாற்றின் பக்கத்தை பிறருக்கு விடாமல் நிற்கிறார் சிவாஜி. அதற்கு அரசியலும் முக்கியக் காரணம். மிகவும் சிரமப்பட்டால் ஆதில்ஷா, நிஜாம் ஷா ஆகிய ஆட்சியாளர்கள் சிவாஜியின் காலுக்கு கீழே கண்டுபிடிக்கலாம். நான் இவர்களைப்போன்றவர்களை அறியவே எனது நூலின் மூலம் முயற்சிக்கிறேன். என்னை விட பெரிய வரலாற்று ஆய்வாளர்கள் சிவாஜி குறித்த நூல்களை எழுதியுள்ளனர். நான் இத்தனை பேர்களில் சிவாஜி மேலெழ என்ன காரணம் என்று அறிய எனது எழுத்துக்களில் முயன்றிருக்கிறேன்.

உங்களது ஆராய்ச்சி குறித்து விளக்குங்களேன்.

பல்வேறு மொழிபெயர்ப்புகள் வழியாக இந்நூலுக்கான தரவுகளை திரட்டு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.  அக்டோபர் 2016 இல் நூலை வெளியிடுவதே எனது திட்டம். ஆனால் தகவல்கள் ஆராய்ச்சிகள் நீண்டதால் காலதாமதம் ஆகிவிட்டது.

உங்களது 25 வயதில் Ivory Throne என்ற பெயரில் 700 பக்கங்களுக்கு கேரளாவின் வரலாற்று எழுதினீர்கள். வரலாற்று நூல்களை மட்டும்தான் எழுதுவீர்களா அல்லது கதை எழுதும் ஆர்வம் உள்ளதா?

பத்தொன்பது வயதில் எனக்கு பிடித்தமான வரலாற்று தரவுகளை தேடி முதல் நூலை எழுதுவதற்கான வேலையில் இறங்கினேன். அதிலுள்ள மனிதர்கள், நான் படித்த விஷயங்கள் என்னை கட்டுரை எழுத தூண்டின. நாவல் அப்படியல்ல. அதற்கு வாழ்பனுபவங்கள் தேவை. மிகமோசமான நாவலை எழுதுவது சுலபம்தான். அது உங்களை சாகும்வரை துன்புறுத்தும். எனவே, 2024 வரை நாவல் எழுதக்கூடாது என முடிவெடுத்திருக்கிறேன்.  ஒரேமாதிரியான சலிப்பூட்டும் மற்றுமொரு நாவலை எழுத விரும்பவில்லை.

வரலாற்று எழுதுவது என்பது தற்போதைய டிரெண்ட் என கூறலாமா?

வரலாற்று ஆய்வாளர் வில்லியம் டால்ரைம்பிள்தான் நீங்கள் கேட்ட கேள்விக்கு பொறுப்பு. வரலாற்றை எழுதுவதில் எனக்கு ஆர்வமூட்டியவர் இவர்தான். இந்திய வரலாற்றில் நிறைய மனிதர்கள் உண்டு. குறிப்பாக பெண்களின் குரல் அதில் கேட்கவேண்டுமென்பது எனது ஆசை.

வரலாற்றில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

நிறைய மனிதர்கள் உள்ளனர். ஆனால் பெண்களை தேர்ந்தெடுக்கவே விரும்புகிறேன். அவர்கள்தான் வரலாற்றில் பெரிதும் கவனிக்கப்படாமல் போனவர்கள். எனவே பெண்களின் வாய்மொழியாக கதைகளை கேட்கவே விரும்புகிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி 2020 ஆம் ஆண்டு முடியும் நூலை எழுதி வருகிறேன்.

தமிழில்: ச. அன்பரசு
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்