டெக் புதுசு!


டெக் புதுசு!


Image result for BllocZero18




Jaquet Droz Signing Machine
சினிமா, எழுத்து, தொழில் என பிரபலமாக இருந்தால் நன்கொடை, ரசிகர்கள் என கையெழுத்து கேட்டு வரும் கூட்டத்தை சமாளிக்க 585 பாகங்களைக் கொண்ட இக்கருவி உதவும். இதன் மூலம் ஈசியாக கையெழுத்து போட்டு கைவலியிருந்து தப்பிக்கலாம். ரூ. 3,59,04,015

BllocZero18

ஸ்மார்ட்போன் போதையிலிருந்து மீட்க வந்த ப்ளோக்ஜீரோ போன், ரூட் எனும் நுட்பத்தை பயன்படுத்துகிறது. மோனோகுரோம் ஸ்கிரீன் முதல் பயன்படுத்தும் ஆப்ஸ் வரை சிம்பிளாக இருக்கும். 13 எம்பி கேமரா, 4K வீடியோ என ஸ்மார்ட்போன் அம்சங்களுக்கும் குறைவில்லை. ரூ.35,073

RedKey

கணினிகளில் உங்களது  முக்கியமாக தகவல்கள் அழிக்கமுடியாதபடி மாட்டிக்கொண்டுவிட்டதா? சிம்பிளாக ரெட்கீயை வாங்கி யுஎஸ்பியில் பொருத்தினால் அத்தனை தகவல்களும் நிரந்தரமாக அழிந்துவிடும். பிரைவசிக்கேற்ற மென்பொருள். ரூ.6,057

Sennheiser CX Sport

விளையாட்டு வெறியர்களுக்கான இயர்போன். சிம்பிளான எடையில் இயங்கும் இயர்போனை ரிமோட் மூலம் இயக்கலாம். ரூ. 11,626