கடவுச்சொல்லில் கோட்டைவிட்ட அமெரிக்கா!
அணுஆயுதங்களை இயக்க முடியுமா?
புதிய தலைமுறையினர் சைபர் அட்டாக்
மூலம் அணு ஆயுதங்களை இயக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர் என அமெரிக்காவின் பென்டகன் தகவல்
தெரிவித்துள்ளது. மிலிட்டரி அமைப்புகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவரும் நிலையில் ஒருமணிநேரத்தில்
இதனை டெக் நுட்பம் தெரிந்தவர் கையகப்படுத்த முடியும்.
அமெரிக்க ராணுவம் உலகிலேயே அதிக
பட்ஜெட்டாக 674 பில்லியன் டாலர்களை ஆயுதங்களை கொள்முதல் செய்யப் பயன்படுத்துகிறது.
ஆனால் எங்கே சொதப்பல் தொடங்குகிறது? ஆயுத சிஸ்டங்களை பாஸ்வேர்ட் அமைத்து பாதுகாக்குமிடத்தில்தான்
ஹேக்கர்கள் உள்நுழைகின்றனர். 2012-17 வரையிலும் பென்டகனிலுள்ள ஆயுத அமைப்புகளை ஹேக்
செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
சரியான முறையில் பாஸ்வேர்டுகளையும்,
செய்திகளை என்கிரிப்ஷன் செய்யாமலும் இருந்தால் விரைவிலேயே அமெரிக்காவின் ஆயுதங்களை
ரஷ்யர்களோ, சீனர்களோ பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.