ஃப்ளூ காய்ச்சல் அபாயம்!
ஃப்ளூகாய்ச்சல் அபாயம்!
வளர்ந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்
ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசிகள் அதிகம்
என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
குழந்தை பிறந்து ஆறு மாதமாகாமல்
காய்ச்சல் தடுப்பூசிகள் பயனளிப்பதில்லை என்பதால் கர்ப்பிணியாக இருக்கும்போதே தடுப்பூசிகளை
உடலில் செலுத்துவது நல்லது.
2011 செய்த ஆய்வுப்படி வளரும் நாடுகளில் 28 ஆயிரம்
-1,11,500 வரையிலான குழந்தைகளை இன்ப்ளூயன்சா பாதிப்பு கொன்றழித்தது நிரூபணமாகியுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி இடுவது, தாயைக் காப்பாற்றுவதோடு குழந்தையையும் நோய் பாதிப்பு
ஏற்படாமல் காக்கும். ஆண்டுதோறும் 2-30 சதவிகித குழந்தைகளையும், பத்து சதவிகித பெரியவர்களையும்
இன்ப்ளூயன்சா பாதிக்கிறது. ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசியின் விலை அமெரிக்காவில் இருபது
டாலர்களுக்கு குறைவாகவும், தென் ஆப்பிரிக்காவில் 5 டாலர்களுக்கும் குறைவாகவே உள்ளது.
உலகெங்கும் ஃப்ளூ காய்ச்சல்களால் நேரும் இறப்புகளின் தோராய அளவு 2,90,000-6,50,000
மாறியுள்ளது.