அமெரிக்காவின் பொருளாதார போர்!


அமெரிக்காவின் நெருக்கடி!

Image result for us taxwar




ஐ.நா சபையின் 73 ஆவது மாநாட்டில் ட்ரம்பை பார்த்து பிற நாட்டினர் சிரித்தார்களா இல்லையா என்று தெரியாது. ஆனால் ட்ரம்பின் வரிப்போர் இரான் மட்டுமல்ல அந்நாட்டில் தொழில்தொடங்கியுள்ள வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு பேரிடியாக மாறியுள்ளது.

அமெரிக்கா- இரான் அணுஆயுத ஒப்பந்தம் காலாவதியானது என ட்ரம்ப் அறிவித்ததால் இரானுடன் வர்த்தக உறவு கொண்டிருந்த பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகள் பொருளாதார சிக்கலில் உள்ளன. வரி, தடைகளால் இரானின் பொருளாதார வளர்ச்சி 1.8% ஆக உள்ளது. வரும் நவம்பரில் அமெரிக்க விதிக்கும் தடையால் இரானுக்கு 80% வரிவருவாய் தரும் கச்சா எண்ணெய்க்கு விற்பனை குறைந்து பொருளாதாரம் 35 சதவிகிதம் அடிவாங்கும். “மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதம் வளர்க்கிறது இரான். அதன் நிர்வாகிகள், இயற்கை வளத்தை கொள்ளையடித்து செல்வத்தால் கொழிக்கின்றனர்” என ட்ரம்ப் ஆவேசத்தில் வெடித்துள்ளார். இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, ஜெர்மன் ஆகிய நாடுகள் இரானுடன் ஆயில் ஒப்பந்தம் செய்ய புதிய பணமுறையை உருவாக்க முயற்சித்து வருகின்றன. அமெரிக்காவின் ஆவேசம் ஐரோப்பாவை நட்பு வட்டத்திலிருந்து மெல்ல வெளியேற்றிவருகிறது.