ஸ்டார்ட்அப்களுக்கு அமேஸான் உதவி! அத்.22





Image result for amazon launchpad






 

22

ஸ்டார்ட்அப் மந்திரம்- கா.சி.வின்சென்ட்

 

ஸ்டார்ட்அப்புகளுக்கு உதவி!

 

குறிப்பிட்ட இடத்தை மையமாக கொண்டு பிஸினஸ் தொடங்கும் முன்பு ஸ்காலேரியன் சைக்கிள் நிறுவனத்தைப் போல ஆராய்ச்சி செய்வது முக்கியம். சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை வசதிகள், வரி உட்பட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து கோவையை டிக் அடித்திருக்கிறது சச்சின் கிஷோர் மற்றும் சோமி தாஸ் ஆகியோரின் குழு. 2014 ஆம் ஆண்டு தொடங்கிய சைக்கிள் நிறுவனமான ஸ்காலேரியன் கியர் சைக்கிள்களை தயாரிப்பது தொடங்கி அதனை பெயிண்ட் செய்யும் பணி வரையில் கோவை உதவுகிறது என தலையசைக்கிறார் சச்சின். முதலீடு சம்பந்தமான சந்தேகங்கள், தடுமாற்றங்கள் இருந்தால் forentrepreneurs.com என்ற முதலீட்டாளர் டேவிட் ஷோக்கின் தளம் உதவும்.

                                          

அமேஸான் இ-வணிகத்தோடு ஸ்டார்ட்அப் முயற்சிகளுக்கு நம்பிக்கை தரும் விதமாக அமேஸான் லாஞ்ச்பேடு என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது 250 ஸ்டார்ட்அப் முயற்சிகளை நிதியளித்து ஆதரிக்கிறது அமேஸான். எதற்கு? "பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்லும் ஸ்டார்ட்அப்களை பெருமளவு வரவேற்கிறோம். லாஞ்ச்பேடின் அவசியம், இணையத்தில் பொருட்களை விற்பது தொடர்பான வழிகாட்டுதல்தான்" என்கிறார் இத்திட்ட தலைவரான சதீஷ்குமார் னிவாசன். இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்டார்ட்அப் முயற்சிகளை மார்க்கெட்டிங் செய்வதற்கான வாய்ப்புகளையும் வசதிகளை அமேஸான் ஏற்படுத்தி தருகிறது. எனவே வாய்ப்புகளை கெட்டியாக பிடிச்சு முன்னேற அமேஸான் உதவும்.

 

ஸ்டார்ட் கம்பெனிகளை தொடங்கி அதிபுத்திசாலியான ஐடியாவை உலகெங்கும் கடைவிரித்தாலும் இணையபாதுகாப்பு என்பது மிக முக்கியம். என்னதான் சம்பாதித்தாலும் கதவு இல்லாத வீட்டில் எதையும் பாதுகாத்து வைக்கமுடியாது அல்லவா? அதேபோல்தான் இணையபாதுகாப்பும்.

 

 

பாஸ்வேர்டு திருட்டு அளவு - 81%

 

நிதிசார்ந்த முறைகேடு - 73%

 

இமெயில் வழியிலான தாக்குதல் - 63%(மால்வேர்)

 

இணையதளத்தில் ஏற்படும் பாதிப்புகளை ஆண்டுதோறும் அல்லது மாதந்தோறும் அளவிட முயற்சிக்கலாம். இணையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாஸ்வேர்டு பாதுகாப்பு பற்றி பாடம் எடுப்பதோடு தகவல்களை கையாள்வதற்கான அனுமதியை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தரலாம். என்க்ரிப்ஷன் மென்பொருட்களை பயன்படுத்துவது அவசியம்.




பிரபலமான இடுகைகள்