சூழல் குற்றங்கள் - தீவிரவாதம் வளர்ப்பது எப்படி?


சூழல் குற்றங்கள்!



Image result for environmental crime



சூழல் தொடர்பான குற்றங்களின் மூலம் புழங்கும் பணமே ஆயுதக்குழுக்களை உலகெங்கும் வளர்க்க உதவிவருகிறது. இதில் 38% வருவாய் கிடைக்கிறது என்கிறது இன்டர்போல் அறிக்கை. போதைப்பொருள், குழந்தைகள் கடத்தல், கொள்ளை, நன்கொடை ஆகியவற்றை விட இந்த வருவாய் அளவு அதிகம்.
இயற்கைவள கொள்ளையில் மரம் வெட்டுதல், சட்டவிரோத மீன்பிடித்தல், சுரங்கம் வெட்டுதல் ஆகியவை அடங்கும். இதில் கிடைக்கும் சட்டவிரோத வருமானம் 110-281 பில்லியன் டாலர்கள். 2016 ஆம் ஆண்டைவிட இது 14 சதவிகதம் அதிகம்.
ஆயுதக்குழுக்கள் இதில் அடிக்கும் கொள்ளையின் அளவு 22.8 -– 34 பில்லியன் டாலர்கள். அல் ஷபாப், டிஆர்சி புரட்சிக்குழு, தலிபான் ஆகியவை இந்த இயற்கைக்கொள்ளையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு குறிப்பிட்ட நாடுகளில் நிலவும் குளறுபடியான உள்நாட்டுபோர்களும், அரசியல் சீர்குலைவுகளும் முக்கிய காரணம். யானை தந்தங்கள் மூலம் 4-12 மில்லியன் டாலர்களும், சட்டவிரோத மரம் வெட்டுதல் மூலம் 152 பில்லியன் டாலர்களும்  கிடைக்கின்றன.