அரசியலும் அநீதியும்!
அரசியல் குரு- கோபால கிருஷ்ண கோகலே
இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரான கோபால கிருஷ்ண கோகலே, சமூக சீர்திருத்தவாதி. காந்தியின் அரசியல் வாழ்வுக்கு முன்னோடி. காந்தி, கோகலேவை ஃபெர்குஷன் கல்லூரி மைதானத்தில் சந்தித்தார். பின்னர் காந்தியை கல்கத்தாவிலுள்ள வீட்டுக்கு அழைத்து உரையாடினார் கோகலே. பின்னர் காந்தி இந்தியா முழுக்க ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணித்தபோது கோகலே காந்திக்கு உறுதுணையாக இருந்தார்.
போராட்ட மியூசியம்
காந்தி நிறவேற்றுமை வெறியால் பாதிக்கப்பட்ட பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் காந்திய தென்னாப்பிரிக்காவில் செய்த போராட்டங்கள், அவரது வாழ்க்கை ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இதனைப் பார்க்க பணமும் வசூலிக்கப்படுவதில்லை. இவ்விடத்தை 2016 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி சுற்றிப்பார்த்தார். "மோகன்தாசின் பயணம் மகாத்மாவாக தொடங்குவதற்கு காரணமான இடம் " என்று பேசினார் மோடி.
ஆச்சரிய இந்தியர்!
தென்னாப்பிரிக்காவிலிருந்த ஆங்கிலேயர்களின் சர்க்கரை ஆலைக்கு குறைவான கூலிக்கு ஆட்கள் தேவைப்பட , வேறுவழி? இந்தியர்கள் பல்வேறு போலி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவுக்கு தருவிக்கப்பட்டனர். 1893 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு வந்த காந்தி, இந்திய நிறுவனத்திற்கு வாதிடும் முயற்சியில் இருந்தார். ரயிலிலிருந்து தள்ளப்பட்டவர், இந்திய தொழிலாளர்களை வெள்ளையர்கள் அடித்து வேலைவாங்கி கூலியையும் உரிமையையும் ஏமாற்றுவதை கண்டார்.
இந்தியர்களை ஒருங்கிணைக்க நேடல் காங்கிரஸ் அமைப்பை தொடங்கி, கருத்துக்களை பிரசாரம் செய்ய இந்தியன் ஒப்பீனியன் என்ற பத்திரிகையையும் தொடங்கினார். பத்திரிகையில் முழுக்க தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களின் நிலையை எழுதினார். அதோடு அகிம்மை, ஒத்துழையாமை, சத்யாகிரகப் போராட்டங்களையும் பிரசாரம் செய்யும்விதமாக கூட்டங்களை நடத்தினார்.
காந்தியின் போராட்ட விவகாரங்கள் லண்டனை எட்ட உடனே சுதாரித்த ஆங்கிலேயர் அவரை வெளியேற்ற சட்டங்களை பயன்படுத்த ஆலோசித்தனர். ஜெனரல் ஜான் ஸ்முத்ஸ் இந்தியர்கள் தம் கைவிரல் அடையாளங்களை அரசிடம் பதியவேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். வணிகர்கள் தொழிலாளர்களுடன் இணைந்து போராடினால் அரசு சும்மாயிருக்குமா? கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் நான்குமுறை குடும்பம் சகிதமாகவே கைதாகினார் காந்தி.
பின்னர் ஜெனரல் ஸ்முத்ஸ் காந்தியை சந்திக்க ஏற்பாடானாலும் இனவேற்றுமை சட்டத்தை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டத்தை நிறுத்தமுடியும் என்று கறார் காட்டினார். ஜோகன்ஸ்பர்க் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நிற்காமல் நடக்க வேறுவழியின்றி சட்டத்தை வாபஸ் வாங்கினார். ஆனால இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் பயணிக்க பல்வேறு விதிகளை விதித்து கட்டுப்படுத்த, காந்தி விதி இயற்றிய நூல்களை பகிரங்கமாக மக்களுடன் இணைந்து எரித்தார். இம்முறையில் 2 ஆயிரம் நூல்கள் மக்களால் எரிக்கப்பட்டு அதிருப்தியை அரசுக்கு காட்டினர் மக்கள்.
நிலக்கரி தொழிலாளர்கள் உட்பட 20 ஆயிரம் கூடிய அகிம்சை போராட்டத்தை ராணுவத்தினர் வன்முறையால் கலைக்க முற்பட்டனர். கூலி மக்கள் இப்போராட்டத்தில் தியாகிகளாக மாறினர். தொடர்ச்சியான போராட்டத்தின் வழியாக 1914 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அரசு இந்தியர்களின் கோரிக்கைகளை ஏற்றது. 1915 ஆம் ஆண்டு காந்தி இந்தியா திரும்பினார்.
தமிழில்: ச.அன்பரசு
தொகுப்பு: யசோதா கண்ணன், பரமராஜூ
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்(அஸ்வின் நந்தகுமார்)