இடுகைகள்

கிராஃ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடையாளம் தெரியாத கடவுள் காப்பாற்றும் கிராஃபிட்டி எனும் புரட்சிகர கலை!

படம்
இங்கிலாந்தில் பாங்ஸி என்ற கலைஞர் அரசியல் கிராஃபிட்டிகளை வரைந்தே புகழ்பெற்றவர். அவரை பாங்ஸி என்று சொல்லி அழைத்தாலும் கூட அவரது முகத்தை யாருமே பார்த்தது இல்லை. அமெரிக்காவில் தான் கிராஃபிட்டி முதலில் தொடங்கியது. அரசு, தனியார் என்றெல்லாம் கிடையாது. உடனே ஸ்ப்ரே பெயின்டை குலுக்கிக்கொண்டு வரையத்தொடங்கிவிடுவதுதான் கிராஃபிட்டி கலைஞர்களின் ஸ்டைல்.  சட்டவிரோதம் என்று சொல்லி காவல்துறை அடிக்கடி துரத்தினாலும் அதற்கெல்லாம் கிராஃபிட்டி கலைஞர்கள் பயப்படுவதில்லை. ஆரஞ்ச் தெலுங்குபடத்தில் ராம்சரண் கிராஃபிட்டி வரைந்துகொண்டு கல்லூரியில் படிப்பவராக நடித்திருப்பார். இந்த கிராஃபிட்டி என்ற வார்த்தை கிரேக்கத்தின் கிராபீன் என்ற வார்தையிலிருந்து உருவானது. இப்படி வரைபவர்கள் சிலர் மட்டும்தான் பெயரை எழுதுவார்கள். பலர் ஓவியத்தை வேகமாக வரைந்துவிட்டு இடத்தை காலி செய்துவிடுவார்கள்.  இப்போது பல்வேறு முரல் கலைஞர்களும் கூட்டமாக சுற்றுவது இன்ஸ்டாவில்தான். சுவர்களில் வரைவதும் பெரிதாக மவுசு குறையாமல் சென்றுகொண்டிருக்கிறது.  இங்கிலாந்தின் பிரிஸ்டலில்தான் பாங்ஸி வசிக்கிறார். கிராஃபிட்டி கலைஞர் என்றால் பலருக்கும் இவர்தான் நினைவுக