இடுகைகள்

மார்பெலும்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடலிலுள்ள செல்கள், உறுப்புகள், எலும்புகளின் பணி என்ன?

படம்
              உடலிலுள்ள செல்கள் , உறுப்புகள் , கட்டமைப்பு ஆகியவை உடலின் இயக்கம் தடையற நடைபெற உதவுகின்றன . திசுக்கள் செல்கள் இணைந்து பல்வேறு வித திசுக்களை உருவாக்குகின்றன . நமது குடல் பகுதி , நான்கு வகை திசுக்களால் உருவானது . இதில் செரிக்கப்பட்ட உணவு தவிர்த்த கழிவுகளை குடலுக்குள் தள்ளும் தசைகளும் உள்ளடங்கும் . உடலிலுள்ள செல்கள் அனைத்தும் விதவிதான அமைப்பைக் கொண்டவை . அவற்றின் செயல்பாடும் இதுபோலவே மாறுபடும் . குடலிலுள்ள சில வகை செல்கள் உணவிலுள்ள சத்துக்களை உறிஞ்சுகின்றன . உடலிலுள்ள அனைத்து பாகங்களின் உருவாக்கத்திலும் செல்களின் பங்குண்டு . அதிக எண்ணிக்கையிலான செல்கள் இணைந்துதான் திசு உருவாகிறது . திசுக்கள் ஒட்டுமொத்த உருவம்தான் உறுப்புகள் . உறுப்புகள் உடலின் செயல்பாடுகள் நடைபெற உதவுகின்றன . நரம்பு செல்கள் ஒன்றாக இணைந்திருப்பதால் முக்கியமான சமிக்ஞைகளை உடலெங்கும் கடத்துகின்றன . இவை மூளைக்கு அனுப்பப்படுகின்றன . தசை செல்கள் உடலின் தசைகளை இறுக்கமாக்கி அதனை சுருக்குகின்றன . கால் மற்றும் கைகளின் தசைகளை நீட்டி நெகிழ்த்தவும் உதவுபவரை தசை செல்கள்தான் . உடல்