இடுகைகள்

மியான்மர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மியான்மரில் தொடங்கியுள்ளது இளைஞர்களின் தெரு நடனம்!

படம்
இந்தியில் இப்போதுதான் ஸ்ட்ரீட் டான்ஸர் படம் ட்ரெய்லர் பார்த்து முடித்திருப்பீர்கள். இங்கு தேசி ராப், கானா என பாடல், இசையில் உயரே பறக்கிறோம். ஆனால் ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் நிலைமை இப்போதுதான் பரவாயில்லை. இங்கு நடனம், தெருநடனம், பாடல்களை அனைவரும் கேட்கும் நிலை இப்போது வந்திருக்கிறது. இப்போதுதான் சிம்கார்டுகளின் விலையே குறைந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டு தொடங்கி, தெரு நடனங்கள் அங்கு பிரபலமாகத் தொடங்கின. இன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஹிப் ஹாப் நடனங்களை அங்கு ஆடி வருகின்றனர்.இதில் கிடைக்கும் புகழ் அங்குள்ள இளைஞர்களுக்கு பணத்தை விட முக்கியமாகப் படுகிறது. 2014இல் இருந்துதான் ஹிப் ஹாப் இசை வடிவம், நடனம் அங்கு பகிரப்பட்டு வருகிறது. இதன்காரணமாக யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்து தளங்களிலும் இசை வீடியோக்கள் நிரம்பி வழிகின்றன. மியான்மரின் யாங்கூனிலுள்ள நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சாலையில் அடிக்கடி தெரு நடனங்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். "தாய்லாந்துக்கு வேலைக்கு போன இடத்தில்தான் இந்த டான்சைப் பார்த்தேன். கிடைச்

ஆங் சன் சூகி மீது தொடங்குகிறது ஐ.நா வழக்கு!

படம்
honghong free press 2017ஆம் ஆண்டு மியான்மரில் உள்ள ரோஹிங்கிய முஸ்லீம்கள் மீது பௌத்தர்கள் தீவிர இன அழிப்பு செயல்முறைகளை செயல்படுத்தினர். இதனால் அங்கு கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. வாழ்வதற்கான சூழ்நிலை இல்லாத அம்மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர். இவர்களின் எண்ணிக்கையை மியான்மர் அரசு, 5 லட்சம் என்கிறது. ஆனால் வங்கதேசத்திற்கு அகதியாக வந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் ஆகும். 2018ஆம் ஆண்டு மியான்மரில் முஸ்லீம்கள் மீது நடந்த ராணுவ வன்முறை மற்றும் அரசின் நடவடிக்கைகள் பற்றி செய்தி எழுதிய இரு ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தது அந்நாட்டு அரசு. இதைப்பற்றி மூச்சு கூட விடாமல் இருந்தார் அந்நாட்டின் பிரமரான ஆங்சன் சூகி. இதன்விளைவாக அவரின் மீது உலகம் கொண்ட அபிமானமே தகர்ந்து போனது. இதனால் கனடா அரசு சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்ப பெற்றுக்கொண்டது. மேலும் மனித உரிமைக்கு பாடும் ஆம்னெஸ்டி அமைப்பும் தான் முன்னர் அமைதிக்காக பாடுபடும் வகையில் சூகிக்கு கொடுத்த உயர்ந்த விருதை திரும்ப பெறுவதாக அறிவித்து விட்டது.  வரும் டிச. 10-12 தேதிகளில் ஐ.நா வழக்கில் ரோஹிங்கியா

அகதிகளை மரியாதையாக நடத்த கற்பது அவசியம் - சேட்டன் பகத்

படம்
மியான்மரில் புத்த பெரும்பான்மையினர் சிறுபான்மையினரான ரோஹிங்கயா முஸ்லீம்களை கொடுமைப்படுத்தி இனப்படுகொலை முயற்சிகளை அரங்கேற்றினர். இதன் விளைவாக, வாழ வழியற்ற அம்மக்கள் வங்காளதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் மிளகு ஸ்ப்ரே அடித்து விரட்டினர். உண்மையில் இந்த விவகாரத்தில் இந்தியா இப்படி நடந்துகொள்ளும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. முக்கியமான விவகாரத்தில் இப்படி முதிர்ச்சியற்று நடந்துகொண்டது என்னை வேதனைப்படுத்தியது. உலகம் முழுக்க போர்களால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். சில நாடுகள் அகதி மக்களை ஏற்கின்றனர். உதாரணம்  -கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள். சிலர் தீவிரமாக அவர்களை ஏற்க மறுக்கின்றனர். உதாரணம் - ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள்.  அவரவருக்கு ஏற்பதா, இல்லையா என்பதில் கருத்துகள் உண்டு. இந்தியா ரோஹிங்கயா முஸ்லீம்களை தங்க வைப்பதில் பெரிய பிரச்னை வந்துவிடாது. ஏற்கனவே இங்கு 40 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது அரசுக்கு பிரச்னையாக இருக்காது. பாதுகாப்பு தொடர்பான பிரச்னை என்றாலும் அரசு, அம்மக