நெடுஞ்சாலை கொலைகாரருக்கு மாற்று! - அவருக்கு பதிலாக இவர்
நீதியைக் காப்பாற்றுவதற்கு காவல்துறை உள்ளது. அதன் வழியாக நீதிமன்றம் தண்டனைகளை வழங்கி சட்ட ஒழுங்கை காப்பாற்றுகிறது. ஆனால் இப்படி நடக்கும் செயல்பாடுகள் எளிதானவை அல்ல. சரியாக நடக்கிறது என்றும் கூறமுடியாது. குற்றங்கள் நடந்து அவற்றை காவல்துறை அறிய முடியாமல் அல்லது செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க தாமதமாகும்பொழுது குற்றவாளி என யூகித்தவர்களை மாட்டிக்கொடுப்பது வாடிக்கை. இதில் குற்றவாளி என காவல்துறையில் கூறப்படுபவர்களின் உறவினர்களே அவர்தான் குற்றவாளி என தனிப்பட்ட வன்மத்திற்கு இடம் கொடுத்து அவர்களை பழிவாங்கினால் எப்படியிருக்கும்? ஆபெல் என்பவரின் விவகாரத்தில் இப்படித்தான் உண்மைகள் வளைக்கப்பட்டன. அரசு அமைப்புகள் இதற்கு கூறிய பதில்களும் என்னென்ன சொல்றான் பாருங்க என்ற ரீதியில் இருந்தன. ஐ-45 கொலைகாரர் என அழைக்கப்பட்டவர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவர் செய்த கொலைகள் அத்தனையும் நிஜம். ஹூஸ்டன், கால்வெஸ்டன் இடையிலான நெடுஞ்சாலைதான் 45 என குறிப்பிடுகிறார்கள். இந்த சாலையில் 1982-1997 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 42 சிறுமிகள், இளம்பெண்கள் காணாமல் போய் பிறகு பிணமாக மீட்கப்ப...